ஐந்தறிவு பார்வை!

This entry is part of 34 in the series 20101107_Issue

ஷம்மி முத்துவேல் .நெல்லி மர உச்சியிலும்
எதிர் சாரி ஜன்னலிலும்
பரிச்சயமானோம்
சங்கேதங்களும்
பார்வைகள் மட்டுமே
நம் பாஷைகளாய்..
சோறூட்டும் வேளைகளில்
தவறாமல் சந்தித்தோம்
பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு..
மெல்ல இறுகியது நட்பு..

மரத்தை வீழ்த்த
கோடரியோடு ஆட்கள் வந்த
ஒரு நாள்..

மௌனமாய் வேடிக்கைப் பார்த்தேன்
செய்வதறியாது..

கிடைத்த அவகாசத்தில்
உன் குஞ்சுகளை இடமாற்றம் செய்தாய்..

நடுவே.. ஏறிட்டு
ஒரு பார்வை பார்த்தாய்
அதில் –

அத்தனை அர்த்தங்கள்….

ஷம்மி முத்துவேல் .
சின்ன தாராபுரம் ..

Series Navigation