தீபாவளி 2010

This entry is part of 36 in the series 20101101_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


வாழும் நம் வீட்டை
வசந்த மாக்குவோம்

வானத்தின் வண்ணங்கள்
சுவர்களில் மின்னட்டும்

கரப்பான்கள் பல்லிகள்
காத தூரம் விலகட்டும்

பக்திப் புகைகளில்
படுதாக்கள் மணக்கட்டும்

விரல்களின் நளினங்கள்
கோலத்தில் தெரியட்டும்

பல்சுவை வாழ்க்கையை
பலகாரம் பேசட்டும்

பூவாயும் பொக்கை வாயும்
மத்தாப்பாய்ச் சிரிக்கட்டும்

பிள்ளைகளின் உண்டியை
வெள்ளி நிறைக்கட்டும்

புதுப்பித்த இதயத்தை
புத்தாடை சொல்லட்டும்

எண்ணெய் அப்பாவாய்
திரி அம்மாவாய்
பொறி நாமாய்
குலவிளக்கு ஒளிரட்டும்

தீபஒளி தெய்வம்
நம் திருவீட்டை வாழ்த்தட்டும்

வலிகளை விரட்டும் தீபாவளி
வாழ்வின் வசந்தம் தீபாவளி

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation