கல்லறைப் பூக்கள்

This entry is part of 36 in the series 20101017_Issue

ஷம்மி முத்துவேல்மாமிசச் சிதிலங்களைப்
புழுவரிப்பதையொத்த
உடலுண்ணும் பட்சினிகள்

அகோர நிழல்களின்
பிரதிபலிப்புகள் ஆங்காங்கே

உயிரற்ற சடலத்திடம் கூட
தேடல்கள்
நிலை மாறும் செடி போல்
மரணவீச்சு

உறக்கமற்று, சலனமற்று
தனக்கான சவக்குழியைத்
தோண்டிக் கொள்கிறது
இன்றுதிர்ந்த பூவொன்று

–ஷம்மி முத்துவேல்

Series Navigation