கடந்து செல்லும் கணங்கள்…

This entry is part of 39 in the series 20101002_Issue

இர. சங்கர பிரசாத்


புதிதாய் வாடகைக்கு குடி வந்த வீடு
சொர்க்கத் தீவாய்…
மனைவி, குழந்தைக்கு பிடித்து போனது
பளிச்சிடும் தரை.
பாங்கான அறைகள்.
நீலமே வானாய் விரிந்த
பால்கனிக்கு முத்தமிடும்
பச்சைக் களேபரமாய் மரம்.
வேலை விட்டு
திரும்புகையில்
புது வீட்டு நினைப்பில்
ஒரு மெல்லிய பரவசத்தில்
டீக்கடை பாட்டு
விசிலாய் உடன்வர
அந்த (இருளில் மூழ்கியிருந்த)
பழைய வீட்டைக் கடந்தேன்.
ஏன் ஒரு
நுண்ணிய பொறியாய் வலி?

Series Navigation