இராக்கவிதை!

This entry is part of 32 in the series 20100711_Issue

ரசிகன்


ஓரிரவுக்கு ஒன்றென
பதினெண் வயது போட்ட கணக்கு
ஆயிரங்காதல் கதை…

பேசும் பெண்ணின
இரவுகள் உறங்குவதே இல்லை…
விடியலும் மடி சாய
சுடுமண்ணிலும் காதல் வாசம்!

வீரியம் விரிவடைய
வெட்டுண்டு போயின
காதலும் நட்பும்!

மனங்கள் வேரறுக்கப்பட்ட நிலையில்…
புதியன புதியதாய்
இலைமறை காதல்
இது மூன்றாம் பாலினம்!

நட்பை
காதல் புரியா ஒரு நிலையில்..

அவனோ அவளோ
பிண்ணப்பட்டிருந்த மாயவலையில்…
சிக்கி
சின்னாபின்னமாய் போயிருந்தன
நட்பின் செல்லப்பெயர்கள்!

தோழி துவங்கி
தோழன் ஒதுங்க….

ஒரு அவன்
ஒரு அவளுக்கு
ஒரு இராக்கவிதை!

-ரசிகன்,
பாண்டிச்சேரி

Series Navigation