யார் முதலில் செய்வது?

This entry is part of 35 in the series 20100305_Issue

நாவிஷ் செந்தில்குமார்


ஐந்து நட்சத்திர ஹோட்டலின்
வரவேற்பறையில்
வைக்கப்பட்டிருந்த
முகக்கண்ணாடியின் உள்ளேயும்
வெளியேயும்
இரு குழந்தைகள்
அழுதுகொண்டிருந்தன…
அழுகையை நிறுத்துங்கள்
என்றேன்
‘அதை நிறுத்தச் சொல்
நான் நிறுத்துகிறேன்’ என
மாறிமாறிச் சொல்லின.

Series Navigation