சொற்கள் நிரம்பிய உலகம்

This entry is part of 33 in the series 20091119_Issue

ஆர் ஜி ஐய்யப்பராஜ்என் உற்றார்
வெறும் சொற்களால்
கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சொற்களாலே சிரிக்கிறார்கள்
சொற்களாலே அழுகிறார்கள்
சொற்களாலே கோபப்படுகிறார்கள்.
சொற்கள் அனைத்தும்
தீர்ந்தபின்
ஓர் சுழ‌ல்வ‌ட்ட‌ப் பாதை போல‌
ஆர‌ம்பித்திலிருந்து ஆர‌ம்பிக்கின்ற‌ன‌ர்
“எப்படி இருக்க..?” என்று.

ப்ச் ச‌லித்துவிட்ட‌து.

Series Navigation