என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்

This entry is part of 35 in the series 20091106_Issue

கோ.புண்ணியவான்அப்பாவின் விவரமறியா
பொழுதுகளில்
அவரின் முதுகு
என் சவாரிக்குப்பயனானது

அவரின் தோள்கள்
உலகம் காண தோதானது

பின்னர்
உச்சிமுகர்ந்து
தலைக்குமேல்
தூக்கியபோது
பிரபஞ்சம்
புலனானது

நான் எகிரி குதித்த
தருணங்களிலெல்லாம்
நெஞ்சு பஞ்சு
மெத்தையானது

மிச்சமிருந்த
அனைத்தையும்
அனுபவித்த நான்
எனது விவரம் புரிந்த பொழுதுகளில்
நான் எனது
குடும்பம் குழந்தைகளென
எனதான இருத்தலியலில்
அப்பாவுக்காக
என் நகக்கண் கூட
மிஞ்சவில்லை.

Series Navigation