தீப ஒளியில் சிராங்கூன்

This entry is part of 25 in the series 20091002_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்நகையணிந்த காற்று
நகைக்கிறது

ஹோலிக்கொண்டாட்டத்தில்
முகில்கள்¢

அந்தி வானம் தொடுத்த
கதம்ப மாலைகள்

இது இரவா? பகலா?
மயங்குகின்றன இரவுப்பூச்சிகள்

வசமிழந்து நிற்கின்றனர்
சுற்றுலா விரும்பிகள்
வாகனமோட்டிகளே கவனம்

மின்மினிப்பூச்சிகள்
மேயும் காட்சியோ இந்த
ஒளியூட்டுக் காட்சிகள்?

எல்லாம் சரிதான்
ஆனால்

என் உள்ளத்தைக் கிள்ளும்
இந்த மயில்களையும்
மங்கைகளையும்
மங்கலம் பொங்க வாழ்த்தும்
யானைகளையும்
பார்க்கவே முடியாதாம்
பண்டிகை முடிந்ததும்
என்ன ஆவார்களோ அவர்கள்?

எனக்கு
அழுகை அழுகையாய்
வருகிறது

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation