வேத வனம் விருட்சம்- 43

This entry is part of 34 in the series 20090724_Issue

எஸ்ஸார்சி


அக்கினி போற்றப்படுவோன்
உதார குணமுடையோன்
அவன் அதிதி
எம் வேள்வியகம் வருக
பகைவரையொழித்து
அவர் தம் செல்வம்
கொணர்ந்து எம்வசம் தருக
ஏ அக்கினியே ஆற்றலின் இருப்பே
நினது படையால்
தச்யுக்கள் ஒழிய
அவர்தம் உணவுப்பண்டங்கள்
உம் வசமாகட்டும்
தேவர்களை வசமாக்கும்
நீவிர் எம்மையும் பாலிப்பீராக ( 5/4)

சூரியனே நின்னை
சுவபானுனென்னுமொரு
அசுரகுமாரன் இருள் கொண்டு மூடினான்
உலகங்கள்
திக் பிரமை கொண்டன
இந்திரன் வச்சிராயுதன்
சூரியன் சிக்கிய மாய வலைகள் விலக்கிட
அத்திரியே சூரியனைக்
கண்டு கொணர்ந்தான்
அத்திரி எனும் அப்பிராமணனே
கற்கள் சேர்த்து தித்திக்கும்
சோமம் பிழிந்தான்
தேவர்களைப்போற்றிய அத்திரி
கதிரவனின் கண்ணை
எடுத்து விண்ணிலே நாட்டினான் ( ரிக் 5/40 )

எவன் விழித்திருக்கிறோனோ
அவனையே
கவித்வம் விரும்புகிறது
இசைபொழியும் சாமம்
விழித்திருப்பவன் வசமாகிறது
அவன் நட்பிலே
சோமன் வாழ்வு அமைகிறது ( ரிக் 5/44)

மருத்துக்கள் மண்மீது மழையைச்செலுத்துகிறார்கள்
மேகங்களை உலுக்கி
நீரைச்சொரிகிறார்கள்
புவி அவர்களது
விண்ணும் அப்படியே
வான் வழி தெரிந்த அவர்ட்கு
மேகங்கள் இணங்கி
செல்வம் தருன்றன
சூரியன் உதிக்கும் போது
சோமம் இன்பமாய்ப் பருகி
துரிதப்புரவி மீதேறி
வான் வழியின் எல்கை தொடுகிறார்கள்.

மருத்துக்களே
சாமம் அறிந்த என்னைக்காத்து
பரதனாம் எனக்குக்குதிரையொடு
உண்ணும் உணவு தாரும்
அரசன் சுகம் பெறட்டும் உம்மால்
எமக்கு நிறை மக்கட்பேறும்
குன்றாச்செல்வமும்
நூறு பனிக்கால வாழ்வும் தாரும் மருத்துக்களே. ( ரிக் 5/ 54)
——————————————————————

Series Navigation