ஜாதி மல்லி

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

ரா. கணேஷ்.


திருமணச் சடங்கு அரங்கேறியது
புதுமணப் பூ¡¢ப்பில் நீ,
நாம்

காதல் வானில்
நீ என்னோடு இணைந்ததால்
என் குடும்பம் நம்மை
இணைக்காமல் போனது

ஒரே வீட்டில் தனி தீவாய்
கண்டெடுக்கப் பட்டோம்

காத்திருப்போம் என்றேன்
எப்போதும் போல் சா¢ என்றாய்

நீயிட்ட கோலங்கள் கூட தாண்டப்பட்டன
கலைந்து போய் விடும் என்பதற்காகவல்ல
களங்கமாய் பட்டு விடும் என்பதற்காக

உன் கர்ப்பம் கூட
தீட்டாய் மட்டுமே பார்க்கப்பட்டது

வார்த்தைகள் வாளாய் உனைப் பதம் பார்த்தன
ஜாடைகள் ஜாடி உப்பை அள்ளித் தேய்த்தன
உன் ரணங்களில்

பன்னீர் புஷ்பமாய் என் சுவாசம் கலந்தவள் நீ
காகிதப் பூவாய் உனைப் படம் பிடித்தது
என் குடும்பம்

சில நேரம் நிகழும் சமையல் சறுக்கல்கள்
உன் சாகசங்களாய் கேலி பேசப்பட்டன

உன் விம்மல்களை தாங்க மனமிருந்தும்
வாங்க விலை தொ¢யாமல் பனித்தன என் கண்கள்

விவாதம் பண்ணி விவாஹம் பண்ணியதால்
வீணாய் போனாய் உன் வீட்டிற்கும் நீ

என்றோ நீ சொன்னது…
நம் காதல் ஜெயித்து விட்டது என்று…
இன்று என் நினைவுக்கு வந்து வந்து போகின்றது !

– ரா. கணேஷ்.

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்