வேத வனம் விருட்சம் 16
எஸ்ஸார்சி
தொடரும் தியானம்
உறுதி செய்யும்
பிரம்மானுபவம்
இவ்வுடல் நான்
விடுபட்டு யானே
சச்சிதானந்தம்
அறிய ஞானக்கூர்
வாள் வசமாகும்
ஆளும் பொருளும்
ஊரும் எதுவும்
மனம் லயிக்க
பிடிபடும் உடனாய்
பிடி படல் இறப்பு
விடுபடல்
என்றுமுளதாகும்
ஒப்பிலா வாழ்க்கை
உடல் உயிர்
மனம் புத்தி
காரணம் எனும்
ஐந்து உறை போர்த்திய
ஆன்மா
என்றுமுளது
எல்லாம் நிறைந்தது
பகுத்திட முடியா
பரம் பொருள்
பாசி மூடிய
திருக்குளத்து நீர்
அஞ்ஞானம் போர்த்திக்கொண்ட
ஆன்மா
தியானம் செய்
பாசி விலகும்
பிறப்பும் இறப்பும்
தொலைக்கும் வழி
ஆன்மானுபவம்
பரமானந்தமெனும்
நிறை அமைதி.
விடுதலை வசப்பட்ட
ஆன்மா
அமைதியாய் அடக்கமாய்
ஆத்திரம் தொலைத்து
ஆட்டிபடைத்தபோதும்
ஆனந்த த்துயிலங்கே
அமர வசப்படும்
எப்போதும் மகிழ்ச்சி
எதிலும் மகிழ்ச்சி.
உறங்கி உறங்காது
கனாக்கண்டும் காணாது
விழித்தும் விழிக்காது
தன்னுள் லயித்தல்
விளக்கி மாளாதது.
எட்டாத்தொலை
எட்டும் அண்மை
உட்புறம் வெளிப்புறம்
மொத்தம் நுணுக்கம்
இறப்பினொடு பிறப்பு
காலம் ககனம்
நேற்றின்று நாளை
நல்லது கெட்டது
இன்பதுன்பம்
பெரிது சிறிது
உயர்வு தாழ்வு
மொத்தத்தில் அத்தனையும்
விடுதலை உணர்ந்து
லயித்திடும் ஆன்மா முன்
அர்த்தம் தொலைத்தவை. -சொருப போத உபநிசத்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- அந்த கொடிய பகலின் வேதனை
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- ஏ ஜே நூல் வெளியீடு
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- எழுத்து எழுதுகிறது
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- பூனைகள்…
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு