தேடலில்…!

This entry is part of 43 in the series 20080417_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்


சாலை வசதிகளற்ற
குக்கிராமம்!
வறுமையின் மடியில்
கூடுதலாய் ஓர் குழந்தை!
தெருவிளக்கு தந்தது
கல்வி ஒளி!
உழைப்பும் உண்மையும் தந்தன
உயர்வும் ஊக்கமும்!

இன்றோ ஐம்பதைக்
கடந்த வயது!
வசதிகள் வளம்
நற்பெயர்
மதிப்பு மரியாதை
செல்வமும் செல்வாக்கும்
இவருடன் சேர
இவற்றுடன் சேர்ந்தன
கொழுப்பு கொதிப்பு
சர்க்கரையும்…!

உழைப்பைக் கொண்டு
வறுமையை வென்றவர்
நலத்தை மறந்து
வளத்தைத் தேடியதால்-இன்று
வளத்தைக் கொண்டு
நலத்தின் தேடலில்….
கிடைக்குமா…??


drimamgm@hotmail.com

Series Navigation