கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்

This entry is part of 35 in the series 20080227_Issue

பா.சத்தியமோகன்


அவன் அழுகின்றான் அதை அறிவீரா
எவ்வித சப்தமும் இல்லை
சொற்களில்லை
வடிவமில்லை
திருப்புமுனைத் தேர்வை அடிக்கடி எழுதும் துக்கம் வாட்ட
விடாமல் அழுகின்ற அவனைக் காட்டினாலும் அறிவீரா
எதுவும் சுலபமான முடிவு கொண்டதல்ல என்பதை
அறியத் தவறிய குற்றம் அவனுடையதா? ஜீன்களா?
புதிது புதிதாகத் தொடங்குகின்றான் எதை எதையோ!
இந்தப் பாடம்தான் அவன் மறந்துபோகும் பெரும்பாடம்
காரணம் யார்?
நம்பிக்கை சிரியர் அவனை வம்பிழுத்து வம்பிழுத்து
பாடாகப் படுத்தி ஈடு படுத்தி விட்டு
பின் ஏன் ஒதுங்குகிறார்? கடைசி வரை வரக்கூடாதா?
யோசித்தான்
நேற்று ஒரு ள் பெரும் முள்கட்டு ஒன்றைத் தந்து
கரும்பெனச் சுவைக்கச் சொன்னார்
மறுத்துப்பேசினாலோ இன்னும் இரண்டு கட்டு திணிப்பார்
அவ்வளவு புரிதல் அவருக்கு!
என்ன சொல்வான் பாவம்
அவன் கண்ணீர் வழியே கம்பன் வழிந்து கரைகின்றான்
அவன் கொண்ட நெருப்பில்
இப்போது வெதுவெதுப்புத்தீ வாட்டுகிறது
என்ன செய்யலாம்
அந்திவான் வழியே இன்னும் இருநூற்று ஐம்பது வருடங்கள்
கழித்தே
வெறும் கண்களால் காணப்படப் போகிற சனிகிரகம்
அவனுக்காக காத்திருக்குமா
அதுவும் நேற்றோடு போய்விட்டது
அதுவந்து இவனோடு காரணம் பேசுமா!
வெற்றுடம்போடு சண்டைக்கு கூப்பிடும் காலத்தின்முன்
மெழுவர்த்தியோடு ஞானம் பேசும் இவன் வாழ்வு
போரிடுமா?
ரொம்பவே பலவீனமான ள் என்கிறது காலம்
மலைகளை கடைவாயில் அரைப்பேன் என்ற வார்த்தைக்கு
அர்த்தமே தேடமுடியவில்லை
மிகச்சிறிய மீன்களை மட்டுமாவது வளர்க்க
சைப்படுகிறான்
சிங்கம் வளர்க்கிறாய் என்று துரத்துகிறவர்கள் கூட்டம்
தாண்டி
இவன் பட்டம் பறக்கத்தான் போகிறது
அப்போது இவன் சொல்லக்கூடும்
உரத்த தன் சிரிப்பை
பொத்துகொண்டு உடைபடும் அழுகை என்று!

*****

Series Navigation