பாத்திரத்தில் இல்லை

This entry is part of 36 in the series 20071129_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


இன்னும்
ஒரு மாயையில்தான்
உலகம் இயங்குகிறது

காலத்திற்கேற்ப
மாயையின் பெயர்
மாறியிருக்கிறதேயொழிய
மாயை மாறவில்லை

ஏதோ ஒரு
தனிச்சாயம் பூசிக்கொண்டு
தனித்துநிற்பதாய்
மனப்பாலில் மயங்கி
மனக்குரங்கு

முடியாமைக்கும்
பற்றாக்குறைக்கும்
குறைபாட்டிற்கும்
தாராளமின்மைக்கும்
தனிச்சாயம்
தனித்து நிற்கவே உதவும்
தனித்தன்மைக்கு உதவாது

பரிமாறுவதிலே இருக்கிறது
பரிணாமம்
பாத்திரத்தில் இல்லை
பாத்திறத்திலும் இல்லை


pichinikkaduelango@yahoo.com

Series Navigation