ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது.

மூடிய மண்ணுக்குள்ளிருந்து
பிரபஞ்சத்தை பார்க்க
எந்தவித ஜன்னலும் இல்லை.

இரவும் பகலும் மாறிமாறிச் சுழல்வதை
அறிய முடியாததொரு தருணத்தில்
தனிமையின் தீராத வலி.

பேச்சுத் துணைக்கு ஆளற்றவனத்தில்
காற்றின் ஓசையும்
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்
விட்டு விட்டு தொடரும் பீதியென

விரல் நீட்டிப்பார்க்க மறுத்த
வேர்களின் நுனியில்
மெளனம் நிரப்பப்பட்டது.
இமைவிரித்து மூடும் கணங்களில்
எவ்வித சலனமுமற்று
கும்மிருட்டுப் பயம் தேங்கிக் கிடக்கும்

ஒளியென்று சொல்ல எதுவுமில்லை


2)மெல்ல கசிந்து வந்த ஊற்று
என்னுடலை நனத்துக் கொண்டிருந்தது.
என்றாவது ஒரு நாள்
என்னை திறந்து பார்த்து அதிசயிக்கப் போகும்
உன்னை
ஒருகணம் நினைத்துக் கொண்டேன்
அப்போது நானொரு
குழந்தையாக கூட மாறக்கூடும்
வயோதிகமற்ற விசித்திரத்தின் பிள்ளையாய்


3)ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து
சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று
அதில் விழுந்த மழைத் துளிகள்
பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது

ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு
தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை.
பகலுறக்கம் தீய்ந்து
இரவுதோறும் கரும்பாறை வளர்வதை
கண்ணாப்பா சொல்லியிருக்கிறார்

கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க
குறு குறுவென ஊதிப் பெருகிய
கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.

சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து
பாம்புப் பிடாரன் ஊதிய இசைப் பட்டு
தடுமாறத்துவங்கியது கரும் பாறை

எத்தனை நாள் உள்ளிருப்பது
பாறையைப் பிளந்து வெளியே வந்தது
சாலிஹ் நபியின் ஒட்டகக் குட்டி


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஒரே மெளனத்தின் இருவேறு பாய்ச்சல்கள்

1
வீட்டறையில் வந்து நின்றபோது
தலைசுற்றி வீழ்ந்தாய்
உலகம் சுற்றியது விரைவாய்
கண்சிமிட்டிய நட்சத்திரம்
ஒரு தீப்பறவையாகி
மிதந்து வந்தது மெதுவாய்
உடல்கூடாக
கூடு உடலாக
எந்தக் கூட்டிற்கோ பறந்துபோன உயிர்
காற்றில் தனது தடங்களைப் பதித்து
இன்னும் வேடிக்கைப் பாஞச்க்கிறது

2
இரவின் மரணத்தை எதிஞச்கொண்ட
உனது உடலின் வன்மம்
எறும்புப்பொடி கரைத்துக்குடித்து
அந்த கணத்தை எதிஞச்கொண்டது
வாய்வழியாக குமட்டித்தெறித்த வாந்தியிலும்
குதம்வழி பீச்சியடித்த மலத்திலும்
தளர்ந்த உன்னுடல் புரண்டு
மெளனத்தைக் கொன்றது
பறந்துபோன உயிரை வருடியவாறு
துர்நாற்றம் பிடித்த ஆன்மா
இன்று பீக்கரைசலில் புரண்டுக்கிடந்தது

—-
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்