அபத்தங்களின் சுகந்தம்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

அன்பாதவன்


மின்விசிறிகளில் குடியிருக்கும் கருத்த அழுக்குத்
துணுக்குகள் பறந்து திரியும் சரக்குப் பெட்டியில்
வெளிக்காற்றை அனுமதிக்கா வழியடைத்த கும்பல்

மூட்டைகளிலிருந்து வீசும் பழுத்த
வாசங்களுடன் கலக்கும் பான்பராக் மணம்
பொத்தினாலும் நாசி தொடும் மீன் கவுச்சி

துப்பலின் காறலில் சிதறும்
சிவந்த எச்சிலோடு கொச்சை வார்த்தைகள்

பசியக் காய்கறிகள்,திண்பண்ட
மூட்டைகளென நிரம்பிய பெட்டியில்
சிப்பத்தின்மீது
உட்கார்ந்துவரும் இளம்பெண்ணின்
மார்பகவிளிம்பில் மொய்க்கின்றன
அந்நியக்கண்கள்

புழுதிக்குப்பைகளால் நிரம்பியப் பெட்டியுள்
நுழைகிறான் வாசமில்லா
அழகிய பூக் குவியலுடன் ஒருவன்

இயல்பான சுருதிகளோடு பயணிக்கிறது மின்ரயில்
அபத்தங்களை சுமந்தபடி.

jpashivammumbai@rediff.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.