ரிஷபன் கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

ரிஷபன்


1. வாள் வீசிக் களைத்தன தோள்கள்
மனம் கனத்து அதிகமாகும்
சுவாச விஸ்தீரணம்
கண்ணுக்குப் புலப்படாத எதிரி
இரு முகங்காட்டி
நகைக்கிறான்
தோல்வியை ஒப்புக் கொள்ளா மனம்
தொடர்ந்து போரிடச் சொல்லும்
இணங்கும் இன்னொரு மனம்
ஒரு விசித்திரம் அறியாது
தூண்டுவதும் இணங்குவதும்
ஒரே எதிரியின்
இரு முகங்களே.

2. இதற்கு முன்
நாம் எப்போதும்
சந்தித்ததில்லை.
அதிகம் பரிச்சயமானது
போன ஆகஸ்ட் ஆறாம் தேதி காலை
விருச்சிக லக்னத்தில்தான்.
மாலை ரிசப்ஷனில்
நம்மிடையே
பதினைந்து வருட அந்யோன்யம்.
இந்த வருடம் இந்த மிடம்
முகமறியா அன்னியர் போல்
முனகிக் கொண்டு
எதிரெதிர் திசையில்.
சுலபமாய் ஈஷ’க் கொண்ட
ஆகஸ்ட்டில்
நான் உணர்ந்திருக்க வேண்டும்
பிரிதலும் அவ்வித சுலபமேயென.

3. பிம்பம் விழும்
சத்தம் கேட்டு
மனசுக்குள்
சொற்களற்றுப் போகும்
சுலபத் தியானம்.
எதிரே ன்ற என்னுள்ளூம்
இடவல மாற்றங்கள்.
ஒவ்வொரு முறையும் கிட்டும்
வெவ்வேறு தரிசனம்.
ஏனோ புரியவில்லை
இன்று வரை அலுக்கவில்லை
கண்ணாடியில் என் அறிமுகம்.

4. சிக்கலான ஒரு கவிதையை
வெகுநாட்களாய்
நானும் புரிந்து கொள்ள
முயற்சித்தேன்.
இழை தட்டுப்பட்ட அளவு
நுனிகள் வசப்படாமல்
வித்தை செய்தன.
‘அட.. புரியாமலே போகட்டும் ‘ என்று
காலடியில் விசிறி
முகந்திருப்பி அமர்ந்தேன்.
விரல் பிடியில்
விலகாமல்
ஒரு நுனி.

5. அறிமுகம் ஆகிறவரை
எதுவுமே தனிமை.
ஒற்றைக் கிணறு
ஒற்றைப் பூ
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றை வழித்தடம்
நேர்கின்றபோது
மகத்துவம் உணர்த்தும்
எதுவுமே அதுவரை
ஒற்றையில்தான்.

6. ஆணையை மீறி
அம்மா வந்து
கதவைத் திறப்பாள்.
உதட்டில் விரல் வைத்து
எச்சரிப்பாள்.
தட்டு பூஞ்சிறகாய் மாறும்.
கவளங்கள் சப்தமின்றி
தொண்டைக் குழியில் இறங்கும்.
‘நாளையேனும் žக்கிரம் வந்துவிடு ‘
கெஞ்சுதலுடன் படுக்கப் போவாள்.
காத்திருந்த அப்பாவுக்குக்
கூடுதலாய் ஒரு
காரணம் கிட்டும்.
அந்த இருட்டில் மீண்டும்
அம்மாவைச் சிறகொடிக்க.

7. ஒவ்வொரு மழைநாளிலும்
தவறாமல் உன் னைப்பு.
ஒவ்வொரு சொட்டாய்
உதிர்க்கும்
என் வீட்டு முற்றம்
மழை விட்ட பின்னும்.
ஜன்னல்களை
மூடி வைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்
தவமிருக்கும்.
உன்னைக் காதலித்து
இழந்தபின்னும்
என்னைத் தேற்றும் முற்றம்.
எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ என்றேனும்
ஜன்னலைத் திற.
என்னைப் போலவே
மழை நாளில் உனக்கும் வரும்
என் னைப்பு.

8. ஒவ்வொரு இருட்டிலும்
பார்வை
வெளிச்சத்தைத் தேடுகிறது.
புலனாகிற வழிகளில்
புலப்படாத வழிகள்
புலன்களை மாற்றி வைத்த
வழித் தடம்.
வாசனைகள் கூடச்
சொல்லும் வழிகள்.
விமர்சனங்களற்ற
வழிகள் உண்டோ..
சென்று சேரும்
விதி மட்டுமே ச்சயமாய்
சலிப்புறாது நடக்கும் கால்கள்.
விளக்கை அணைத்த பின்னும்
வெளிச்சத்தைத் தேடும்
இருட்டு வழி.

9. பள்ளிக்குச் செல்லும்
சிறுவனின் பையில்
ஒளிந்திருக்கிறது
படிக்கவே
அவசியமில்லாத
காற்று.

ரிஷபன்

rsrini@bheltry.co.in

Series Navigation

ரிஷபன்

ரிஷபன்