பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

பா.சத்தியமோகன்


1638.

பொன்மலை ஈன்ற கொடி போன்ற பார்வதி அம்மையுடன்
திருக்கயிலை மலையில்
விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் டும் வண்ணம்
சக்தியும் சிவமும் கிய தன்மையில்
பற்பல யோனிகள் யாவும் விளங்கும் முறைமை கண்டு
பணிந்தார் வணங்கினார்
நிலை பெற்ற மாதவம் உடைய நாவுக்கரசர்
இறைவரின் திருக்கோயில் முன் வந்தார்.

1639.

காண்கின்ற அப்பெருங்கோயில் கயிலாயமலை யிற்று
இறைவரைப் பேணுகின்ற பணிக்கு எதிர்நோக்கும்
திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் யாவரும்
பூணும் அன்போடு போற்றி இசைக்க
எழுகின்ற ஒலி பொங்கி நிறைய
அழிவற்ற பெரிய வேதங்கள் யாவையும்
தனித்தனியே ஒலிக்க-

1640.

தேவர்கள் அசுரர்கள் சித்தர்கள் வித்தியாதரர்கள்
இயக்கர்கள் மாதவர்கள் முனிவர்கள்
பக்கங்களிலெல்லாம் நிறைந்து விளங்க
குவளை மலரையும் வாளையும் போன்ற
கண்களுடைய தேவ அரம்பையர் கானமும் மத்தளங்களின் ஒலியும்
அழிவிலாத ஏழு கடல்களின் ஒலியைவிட அதிகமாகி-

1641.

கங்கை முதலான தூய்மையான தெய்வத்தன்மையுடைய
பெரிய நதிகள் கடவுள் மாநதிகள்
மங்கலம் பொலிந்து வந்து தடங்களாக வந்து வணங்கின
எவ்விடத்தும் பரந்து
பெரிய சிவகணத் தலைவர் வணங்கினார்
ஒலியால் பெரும் பலவகை வாத்தியங்கள் முழக்கி
பூத வேதாளங்கள் போற்றின.

1642.

அழகும் குளிர்ச்சியும் உடைய
இரண்டு வெள்ளி மலைகளோ என அங்கு வந்தவர் எண்ணும்படியாக
சிவந்த கண்ணுடைய திருமாலான காளை எதிர் நிற்க
முன் நாளில் அத்தலத்தில் செய்த பெரும் தவப்பயனோ என
முதன்மையாய் மகிழ்ந்து
நந்தி பெருமான் சிவபெருமானுக்கும்
அவரை வழிபடவருகின்ற மற்றவர்க்கும்
நடுவே நடந்து முன்னால் நிற்கவும்-

1643.

வெள்ளிமலை மீது மரகதக் கொடியுடன் விளங்கும்
தெளிந்த பேரொளியுடைய பவள மலையோ எனக்கூறும்படி
இடப்பாகத்தைக் கைக் கொண்ட உமையுடன் கூடி
வீற்றிருக்கும் வள்ளலாரான சிவபெருமானைத்
தன் முன் கண்டார் வாக்கின் மன்னவரான திருநாவுக்கரசர்.

1644.

கண்டார் னந்தக் கடலினை
கண்களால் முகந்து கொண்டு கை குவித்தார்
எதிர் விழுந்தார் எழுந்தார் மெய் குலைந்தார்
அண்டர் முன்பு நின்றாடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தனவாகிய அற்புதத்தை
சொல்ல வல்லவர் யார்!

1645.

தம் முன்பு நேரே கண்டு கொண்டு
அருளாகிய அரிய அமுதம் உண்ணும்படி கேடற்ற அன்பு பெற்றவர்
அளவிலாத ர்வம் முன் பொங்கப்
பொன்மயமான சடையுடைய சிவபெருமானைப் போற்றும்
திருத்தாண்டகங்களை இன்பம் பெருகப் பாடித் துதித்தார்.

1646.

அவ்வாறு நாயனாரின் மனம் களிப்புறுமாறு
கயிலையில் தம் துணையோடு வீற்றிருக்கும் இறைவர் அருளினார்
தூய தொண்டரும் தொழுது எதிர் நின்று கொண்டிருக்க
திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் தன்மை வெளிப்படுமாறும்
முன்பு காட்டியருளிய கயிலாயக் கோலத்தைச்
சேய்மையாகுமாறும் செய்தார்.

1647.

ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றார் சிவபெருமான்
திருவடித் தொண்டர் மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தினார்
சிவந்த சடையுடைய வேணியர் அருள்
இவ்வளவுதானோ எனத் தெளிந்து கொண்டு
உலகம் உய்ந்திடுமாறு தாம் கண்டதைப் பாடுவார் மகிழ்ந்து.

1648.

“மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையன் மகளோடும்” எனும்
குற்றமற்ற குளிர்த் தமிழ்ச்சொல்லால் குலவும் திருப்பதிகங்களை வேதமுதல்வரான
இறைவரை
திருவையாற்றில் பொருந்துகின்ற
சஞ்சரிப்பவும் நிற்பவுமான உயிர்கள் யாவும்
தம் காதல் துணையோடும் கூடக் கண்டேன் என்று பாடி நின்றார்.

1649.

கண்டார் தொழுதார் வணங்கினார்
கண்ணுதலார் தம்மைப் போற்றி திருத்தாண்டகங்கள், குறுந்தொகை, திருநேரிசை

அன்புடைய திருவிருத்தம் முதலான பதிகங்கள் பாடி வணங்கினார்
திருத்தொண்டு செய்வதென
அண்டர்பிரானின் திருவையாற்றில் தங்கினார் நாவுக்கரசர்.

1650.

நிலைபெற்ற அந்தத் திருவையாற்றுத் தலத்திலிருந்து
திருநெய்த்தானம் முதலான பதிகள் வணங்கி
செந்தமிழ் மாலைகளால் திருப்பதிகங்கள் பாடி பணி செய்து போற்றி
தேடிய திருமாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருக்கும்
திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

1651.

திருப்பூந்துருத்தி சேர்ந்து விருப்போடு புகுந்து
திருநடமாளிகையான கோவிலின் முன்னர் சார்ந்து வலம் வந்து இறைஞ்சினார்
தம்பெருமானின் முன் பரிவோடு தாழ்ந்து
உள் நிறைந்து நீங்காத அன்பு மேலும் மேலும் பொங்க
அதனால் வெளியாகும் கண்ணீர் மழை வழிய
தம் வயமிழந்த தன்மையரானார்.

1652.

திருப்பூந்துருத்தி அமர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமானை
காளையான பெருமலை மீது எழுந்தருளும் பிரானை
பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்பம் பொருந்தும் திருத்தாண்டகத்தால் பாடினார்.
மேவிய காதல் விளைவால்
இருப்போம் திருவடிக் கீழ்நாம் எனும்
குறுந்தொகைப் பதிகமும் பாடினார்.

1653.

அந்தத் திருப்பூந்துருத்தியில் தங்கியிருக்க வேண்டி
“நாமடி போற்றுவதே” என்ற பொங்கு தமிழ்ச்சொல்லால்
விருத்தம் போற்றிய பாடல் புரிந்தார்
அப்பதியில் தங்கி திருத்தொண்டு செய்வாராகினார்
தம்பிரானாகிய இறைவரின் அருள் பெற்று
சந்திரனும் சூரியனும் தோயும் தன்மையுடைய
திருமடம் ங்கொன்று கட்டினார்.

1654.

பலவகையான தாண்டகங்களுடன்
சிவபெருமானைப் பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவரான சிவனார் விளக்கமாக
தானங்களைக் கூறும் திருத்தாண்டகமும்
உயிர்கள் செல்லவேண்டிய கதிகாட்டிப் போற்றும்
திருஅங்க மாலை உள்ளிட்ட
எல்லையில்லாத பல வகைத் தொகைப்பதிகங்கள்
அருளிச் செய்தார் அங்கே தங்கியிருந்தார்.

1655.

பொன்னியாறு (காவிரி) வலம் வருகின்ற திருப்பூந்துருத்தியில்
திருநாவுக்கரசர் இருக்கும் காலத்தில்
கல் போன்ற மனமுடைய சமணர்களை வாதத்தில் வென்று
அவர்களின் பொய்க்கட்டுகளை அழித்து
தென்னவனான பாண்டியனின் கூன் நிமிர்த்தி அருளி
திருநீற்றின் விளக்கம் ஓங்கச் செய்து
நிலையான சிறப்பு கொண்ட சீகாழியில் தோன்றி அருளிய
மறையவரான ஞானசம்பந்தர் வருகின்றார்.

1656.

இனிய தமிழ்நாடான பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு
செழும் பொன்னி நதி வாய்ப்பான
வளம்தரும் திருநாடாம் சோழநாட்டுக்கு
வாக்கினுக்கு வேந்தர் வந்ததைக் கேள்வியுற்று
விரைந்து அவர்பால் செல்வேன் எனத்
திருப்பூந்துருத்தி எனும் வளமான பதியின் புறம் உள்ள
வயல்கள் சூழ்ந்த இடத்தில் வந்து சேர்ந்தார் ஞானசம்பந்தர்.

1657.

சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர்
எழுந்தருளி வர அச்செய்தி கேட்டு
உலகம் புகழும் பெரும்புகழ் வாகீசர் மனம் மகிழ்ந்து
கண்ணில் பெருகும் களி கொள்ள
கண்டு கும்பிடும் காதலினால்
உள்ளத்தில் பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிரே சென்றார்.

1658.

சீகாழியில் தோன்றிய தமிழ் மன்னன்வரும் எல்லையில்
திருக்கூட்டத்துடன் கூடிக்காதலித்தார்
சூழ்ந்து நெருங்கிய கூட்டத்தின் நெருக்கத்தில்
ஞானப்பிள்ளையார் சம்பந்தர் பார்வையில் படாமல் அவரை வணங்கி
“வாழ்வைத் தரவந்த அவரைத் தாங்கும் முத்துச் சிவிகையை
இந்தத் தாழ்ந்த உடலால் சுமப்பேன்” எனத் தாங்கினார்.

1659.

வந்து மற்றொருவரும் அறியாத விதமாக
மறைந்த வடிவத்தோடு
சீகாழி அந்தணரான ஞானசம்பந்தர் அமர்ந்து அருளி வரும்
அழகான மணிச்சிவிகையை சுமப்பவர்களுடன்
தானும் ஒருவராய்த் தாங்கித்
தம் சிந்தை களிப்புற வருகின்ற நாவுக்கரசரை
ஒருவரும் அறிந்து கொள்ளவில்லை.

1660.

திருஞான மாமுனிவரான சம்பந்தப்பெருமான்
திருநாவுக்கரசு நாயனார் தங்கியிருந்த
திருப்பூந்துருத்திக்கு அருகாக எழுந்தருளி
சிவிகையில் இருந்தபடி
அப்பர் எங்கு தங்கியுள்ளார் என வினவ
உள்ளம் உருகி –
“உம் அடியேன் உம் திருவடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு எய்தப்பெற்று
இங்கே உள்ளேன்” என்றார் சுமந்தபடியே.

1661.

அம்மொழி கேட்டவுடனே திருஞானசம்பந்தர்
பெருகிய விரைவுடன் கீழே இழிந்தருளி
உள்ளம் மிகு பதைப்பு எய்தி
ளுடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசரோ அவர் வணங்குமுன் வணங்க
துள்ளும் மான் ஏந்திய கையுடைய சிவனாரின்
தொண்டரெல்லாம் தொழுதார்
அர! அர! அர! என்ற ஓசையால்.

1662.

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் நாவரசருடன் கலந்தருளி
செழிப்புடைய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்துருத்தி என்ற திருப்பதியில்
மழுவுடன் மான் ஏந்தும் திருக்கரமுடைய இறைவரின் மலர்த்தாள்கள்
தொழுதார் உருகினார் துதி செய்தார் அங்கு உடன் இருந்தார்.

1663.
கொடிய சமணர் தம்மை வாதத்தில் வென்றதையும்
மன்னன் பாண்டியனிடம் இருந்த கூனை நிமிர்த்தியதையும்
குளிர்ந்த தாமிரபரணி ற்றின் நீர் பாயும் நாட்டில்
எல்லையிலாத் திருநீற்றின் புகழ் வளர்த்ததுவும்
பெரும் தவமுடைய சம்பந்தர் சொல்ல
அது கேட்டு மகிழ்ந்தார் தூய புகழ் வாகீசர்.

1664.

கற்பின் தன்மையும்
சிவபெருமானிடம் கொண்ட அன்பின் பண்பும் உடைய
பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசி அம்மையாரின் திறத்தையும்
ஞானத் தலைவரான ஞானசம்பந்தர் எடுத்துக்கூற
அளவிலாச் சிறப்புடைய வாகீசர்
உலகில் விளக்கம் பொருந்திய தமிழ்நாடு எனப்படும்
பாண்டிய நாட்டைக் காண்பதற்கு மனம் கொண்டார்.

1665.

பிரம்மபுரத் திருமுனிவர் (சீகாழித் திருமுனிவர்)
தனது பெரும் தொண்டை
தொண்டை நாட்டில் உறையும் சிவபெருமானை இறைஞ்சி
அங்கும் வணங்கித் தேவாரம் பதிகங்கள் பாடுமாறு
வல்லவரான திருநாவுக்கரசர் வேண்டினார்
முப்புரமெரித்த சிவனாரின் மகனான ஞானசம்பந்தரும்
திருப்பூந்துருத்தி தொழுது வணங்கிப் புறப்பட்டார்.

1666.

இறைவர் ண்ட நாவுக்கரசர் அங்ஙணம் சிறப்புடைய அருள் பெற்று
திருப்பூந்துருத்தியிலிருந்து பாண்டிநாடு கிளம்ப
தென்திசை நோக்கிச் சென்று
காணத்தக்க சிறப்புடைய திருப்புத்தூர் பணிந்து
சந்திரனின் கதிர்கள் தங்கும் கொடிகள் விளங்க மதிலுடைய
திரு லவாய் (மதுரை) அடைந்தார்.

1667.

திருநாவுக்கரசர் மதுரையினில் சென்றணைந்தார்
திருத்தமுடைய நூல்களுடைய புலவர் சங்கத்தினுள்
முன் நாளில் இருந்து தமிழை ராய்ந்த
அங்கத்தில் கண்ணுடைய இறைவரின் திருக்கோயிலின்
முன் பக்கத்தை வலமாக வந்தார்.
முன் நின்று இறைஞ்சினார்
கோவிலுட் புகுந்து வலிமையுடைய பெரிய காளையுடைய
சொக்கநாதப் பெருமானை வணங்கி
மகிழ்வோடு னந்ததில் திளைத்தார்.

1668.

எய்திய பேரானந்த இன்பத்தில் முழுகினார்
கற்றையாக மொய்த்துத் திகழும் சடையுடைய இறைவனை
முளைத்தானை எனும் செந்தமிழ் திருத்தாண்டகத்தால் துதித்து
புறத்தில் சேர்பவராகி கைகளால் தொழுது பணிந்தேத்தி
திருவுள்ளத்தில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

( திருவருளால் தொடரும் )
—-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்