நனவு

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

இளைய அப்துல்லாஹ்


ஒரு இருள் வெளியில்
அலைபாய்கிறது மனது
வெள்ளொளி கீறி சுமை தாங்கும்
ஒரு கோடென விரிகிறது

பலர் கனவாகி வருகின்றனர்
துப்பாக்கி,குழல்,சிரட்டை
பாண்,பஞ்சாராத்தி எல்லாமே
இது கனவாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு காட்சி இரத்தம் சொட்டியது
கூடி நின்றவர்கள் ஏதோ சொன்னார்கள்
இரண்டு பாணுக்காக சிந்திய இரத்தம் என்று

ஒரு நெருப்பு வெளியில் தேய்கிறது தேசம்
போராட்டம் மனிதர்களைக்கொல்கிறது
பின்னர் கூட்டுகிறது.
ஒரு தெறிப்புக்குள் உள்வாங்கி
அச்சப்பாடாய் நகர்கிறது வாழ்வு

தோல் சுருங்கிய மனிதர்களும்
இன்னும் சிலரும் தூக்கி வருகிறார்கள்
இருளிலும் மெல்லிய போர்வைக்குள்
ஆதனைச்செலுத்தி
பின் ஊர்வலம் போகிறார்கள்
~அப்பிட்ட எப்பா| என்றபடிக்கு

அது ஒரு கட்டடமாயும்
அரசவையாயும் தெரிகிறது கனவில்
கொடும்பாவி போல கொண்டு வருகிறார்கள்
அரிசிமூடை,எரிவாயுசிலிண்டர்,பாண் பொம்மை
எல்லாத்தையும் போட்டு எரிக்கின்றனர்.
விலை உயர்வு என்ற கோஷம் காலை வரை கேட்கிறது
என் காதில்ஸ

இளைய அப்துல்லாஹ்
இலங்கை

அப்பிட்ட எப்பா (எங்களுக்கு வேண்டாம);

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்