மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா – தமிழில் நாகூர் ரூமி


‘எதிர்காலம் ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே
அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது.

‘மெளனம் ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே
அதை அழித்துவிடுகிறேன் நான்.

‘ஒன்றுமில்லை ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போது
ஒன்றுமில்லாத எதுவுமே கொள்ள முடியாத ஒன்றை நான் உருவாக்குகிறேன்.

கவிஞர் பற்றிய குறிப்பு

விஸ்லாவா போலந்து நாட்டுக் கவிஞர். 1996ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்ற பெண் கவிஞர். ஒரு விமர்சகராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியவர். ஃப்ரென்ஞ்சு மொழியிலிருந்து பல கவிதைகளை மொழியாக்கம் செய்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய விளைவுகளைப் பற்றியும், போரின் சித்திரவதைகள் பற்றியும் தனது கவிதையில் எழுதியவர். 1923ல் பிறந்த இவர் இப்போது போலந்து நாட்டின் க்ரகோவ் என்ற நகரில் வசிக்கிறார்.

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி