கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது
நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!
உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின்
குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உந்தன்
அணிகள் உண்டாக்கும்
சலசலப்பு ஓசை உன்னினிய
முணுமுணுப்பு
மொழிகள் செவியில்
விழாமலே
மூழ்க்கி விடும்!

மகாகவிப் பெருமானே!
உந்தன்
திருப்பாதங்களின்
அருகே
அமர்ந்துள்ளேன்!
என்னைக்
குனிய வைக்கும்
கவிஞன் என்னும்
மமதை
மகத்தான நின்காட்சி முன்னே
மாய்ந்து போனது!
நேரான பாதையில்
சீராகச் சென்று
எளிய வாழ்வைக் கடைப்பிடிக்க
வழியை மட்டும் நாடுவேன்,
புல்லிலைப் புல்லாங் குழல்
உன்மீது
மெல்லிசை பொழிந்து
நிரப்புவது
போல!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 28, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா