அய்யோ…. அய்யோ….

This entry is part of 46 in the series 20041021_Issue

நெப்போலியன்


நினைவுகளின்
மெத்தையில்
விழித்திருக்கும்
தலையணைக்கண்கள்.

புரட்டப்படாத
பக்கங்களின்
ஏக்கப் படபடப்பை
யாருக்குச் சொல்வது…

ஜன்னலின் வாய்கள்
எப்பொழுதும்
திறந்திருக்கும்
யார் வம்பை முழுங்க ?

உத்திரம் உடைந்து
உன் தலைமேல்
விழும்வரை நினை….

ஷோபாசக்தியின் கொரில்லாவும்
ஆச்சிபியின் சிதைவுகளும்
மண்டையோட்டை குறும்ப
வாசலில் யார் !

நான் உன்னை
நான் எனச் சொல்லலாமா
பின்
நீ என்னை
நான் எனச் சொல்லக்கூடும்
பிரமிளும் அபியும்
இப்படித்தான்.

விட்டுத்தொலை
ரப்பர் பிசுபிசுக்கும் பசை வகை
புளியமரம் கட்டாயம் கல்லடிபடும்
சாமிநாதனியல்
கனடாவில் படிக்கலாம்.

உத்திரம் உடைந்து
உன் தலையில் விழ
ஒங்கொப்புறானே
உன் எனில் நான்தானோ
அய்யோ…. அய்யோ….
—-

நெப்போலியன்,சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation