விளையாட ஒரு பொம்மை

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

வேதா மஹாலஷ்மி


அழகா சுத்துது காத்தாடி
அடுக்கடுக்கா மணல் மேலே

ஆராச்சும் வருவாங்க
பாப்பாக்கு காட்டி விளையாட….
விலை கேட்டா வித்திரலாம்
எப்படியும் ரெண்டாச்சும்!
அக்கா, அண்ணா போறாங்க
ஆனா யாரும் வாங்கலையே!

எம்புட்டு நேரம் தவமிருக்க ?
ஆச்சு ஆறு கடந்தாச்சு
அழுவுற தம்பிக்கு பால் வேணும்
அரிசி வெக்க உலை வேணும்
அழுக்குப் போக தலை வாரி
பொட்டு வெச்சு முத்தம் வெக்க
எங்களுக்கு அம்மா வேணும்

இந்த எல்லா பொம்மையும் நாந்தாரேன்
எங்க அம்மாவை நீ தரியா ?

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலஷ்மி

வேதா மஹாலஷ்மி