பவளமணி பிரகாசம்
ஆரிய உதடும் திராவிட உதடும்
ஆர்வமாய் உறவாடியிருக்க
அவனியதில் களிப்பேறியிருக்க
என்னவளின் சின்ன உதடுகள்
சிறு சிரிப்பும் சிந்தாததேன்
என் சிந்தை மிக நொந்ததேன்
முல்லைப்பூ இதழலளவேனும்
சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ
பெண்ணே புகையிலையல்ல நீ
வாசமிழந்து போய்விடுவதற்கு
காசா பணமா சிரிப்பதற்கு
செலவில்லா செயலல்லவோ
கருமி போல் காரிகையே
காத்து என்ன செய்வாயோ
காத்து நான் நிற்கின்றேன்
சொர்க்கவாசல் திறக்குமென
மாதுளை இதழ்களிடையே
பச்சரிசி பல்வரிசை பார்த்திடவே
கண நேர மின்னலில்
கண் கூசிப் போவதுபோல்
இருண்ட மன வானிலே
ஒளிவெள்ளம் பாயுமென
தவமான தவமிருந்து
தவித்துக் கிடந்த பின்னே
தடாகத்துத் தாமரை போல்
குவிந்த மொட்டு திறந்தது
குமிழ் சிரிப்பும் பிறந்தது
அந்தோ!விரிந்த மலரும் மூடுமோ
மீண்டும் மொட்டாய் மாறுமோ
விந்தையென்ன விந்தையோ
விளங்காத மர்மமோ
மறுபடியும் மெளனமோ
கொத்தாய் சிரிக்கும் கொடிமலராய்
நீ சிரித்திருக்கக் கூடாதோ
விரிந்திருக்கும் புது மலராய்
பூத்தே இருக்கக் கூடாதோ
பூட்டிப் பூட்டி வைப்பதேன்
புன்னகைதான் பொன்னகையோ
பொல்லாத கள்ளியே
கொள்ளையடித்தவளே
முள்ளால் மூடியவளே
சுலபமாய் உதட்டில் ஒட்டிய சிரிப்புடனே
சுதந்திரமாய் சுந்தரிகள் சுற்றிவர
அரிதாய் சிரிப்பவளே
அரிதாய் இருப்பவளே
அரிதாய் இருப்பதே
ஆர்வம் தருவதே
அரிதான கருத்தினை
அறிந்தேன் அரிவையே
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- கடிதம்- செப்டம்பர் 23,2004
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 2
- திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!
- சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி
- அ.முத்துலிங்கம் பரம்பரை
- பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து
- மெய்மையின் மயக்கம்-18
- சொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004
- ஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்
- பட்டுப்பூச்சி
- கடிதம் – செப்டம்பர் 23,2004
- கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்
- கடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்
- கடிதம் செப்டம்பர் 23,2004
- சிரிக்க மாட்டாயோ
- அறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004
- ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:
- சடங்குகள்
- தானம் ஸ்தானம் சமஸ்தானம்
- செவ்வாயின் மீது வீழ்வது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38
- தெளிந்த மனம்
- தீக்குளிக்கும் மனங்கள்!
- பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்
- தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்
- ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்
- உடுக்கை
- பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….
- மணிப்பூரின் போர்க்கோலம்
- வசந்த காலம்
- கவிக்கட்டு 26 – நாய் வால்
- முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி
- செங்கல்லா கனக்குதடி…
- காதலென்பேன்
- பெரியபுராணம் — 10