கிராமத்துப் பார்வைகள்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

வந்தியத்தேவன்


டவுனு வண்டி காலையிலே ரூட்டு வண்டி மாலையிலே
கன்னி கழிந்த கப்பி ரோடு
ஒரு டாயில் உலகம் பேசும் பெருசுகள்

சுள்ளி பொறுக்கி அழகாய்க் கட்டி
நசுங்கிய சும்மாட்டோடு ஓடும் பெண்கள்
பின்னே மனம் கொசுவமாய் ஆடும்

பச்சை மஞ்சள் பழுப்பு சிவப்பெனெ
பல்வேறு நிறங்களில் முந்திரிப் பழங்கள்
நினைவுகள் தொண்டையில் கர கரக்கும்

பழுப்பேறிய கோவணம் இடுப்பிலே இன்னொன்று
மோளமடிக்கும் ஞானத்துக்கு கொல்லையிலே பழையசாப்பாடு
புரிந்த நெஞ்சை காரணம் சுடும்

முருகன் டாக்கீஸில் தலைவர் படம்
‘வா ‘ ரீல் போடுமுன்னர் வரிந்து கட்டியோடும்
மணல் சிம்மாசனத்தில் வெள்ளந்தி மனித(ன்ன)ர்கள்

மருத்துவச்சி கிழவிகளும் மாரடிக்கும் பாட்டிகளும்
ஊர் ரகசியத்தை வெத்தலை பாக்கோடு மெல்ல
கிசுகிசு உரல்களின் குரல்வளை நெறிக்கும்

எல்லைக் கல்லுக்கும் பொட்டிட்டு பூவைத்து
காவக்கார சாமிக்கு பொங்கலிட்டு படையல்
சாமியாட்டத் ‘திருஷா ‘வில் மனம் கரகமாடும்

t_sambandam@yahoo.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்