நிறம்

This entry is part of 47 in the series 20040603_Issue

நெப்போலியன்


எம்புட்டுத் திமிரிருந்தா
எம் புள்ளய நெனச்சிருப்பா…
கட்டுங்கடா வண்டிகள
வெட்டுங்கடா அவிங்கள…

வண்ணாந் தொற முழுக்க
வழியுது ரத்த வெள்ளம்
அடிச்சுத் தொவச்சதுல
அம்பூட்டு தல போச்சு

பண்ணையாரு ஒத்த மவன்
மொன்னையன் கடசி மவ
ஓடிப்போய் செஞ்சுகிட்ட
உண்மைக் கல்யாணம்

சாதியில கவரிமானா
மானங்காக்கும் பண்ணைக்கு
சாயங்காலம் ஆகிப்போனா
கீழத்தெரு வேதவள்ளி

படுக்குறப்ப உதிராத மசுரு
பய காதலுக்கு மட்டும்
சிலுத்து நிக்குதோ !
—-

Series Navigation