அட்சய பாத்திரங்கள்…!!!

This entry is part of 48 in the series 20040506_Issue

சாந்தி மனோகரன்


தடயங்கள் ஏதுமின்றி
களவாடிச்சென்ற பின்னும்
பூக்குழியில் தேன்துளி
சுரந்திருக்கும்…!

தழுவிச்சென்ற தென்றல் தன்னோடு
தள்ளிச்சென்ற பின்னும்
பூவிதழில் புதுவாசம்
பொதிந்திருக்கும்..!!

கடந்து சென்ற இதழ்கள் சில
கண்டுகொண்டு…கொண்டு சென்றும்
பூக்களுக்கோ புன்னகைக்க
புரிந்திருக்கும்…!!!

உண்மையில்
தேன்வாசப்புன்னகை தரும் பூக்களெல்லாம்
பூக்கள் அல்ல..அவை
காம்பின் கைகளில் அழகாய் வீற்றிருக்கும்
அதிசய பாத்திரங்கள்

ஆம்..
அள்ளித்தருகின்ற வள்ளல் கைதொட்ட
அட்சய பாத்திரங்கள்…

shanthi_yem@yahoo.com

Series Navigation