புள்ளிக்கோலம்.

This entry is part of 48 in the series 20040506_Issue

நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து.


____
சித்திரத்தேரை
புட்டி வைத்து அழகு பாற்பது
எத்தனை முட்டாள் தனம்.
மனசும் அப்படித்தான்.
மெளனமே
உன்னை கலைத்துக்கொள்.
துயில் கொள்ள இது காலமல்ல.
மொழிகள் பேச வேண்டும்.
வாழ்த்துக்கள் எனக்கா உனக்கா ?
மெளனங்கள் பேசியதால்
மலர்கள் கூட
சிலிர்த்து நிற்கின்றன.
தென்றல் தவழும் ஆனந்த மனசு
பொசுங்கிப்போகாத ஆனந்த உணர்வு
பொக்கிசமாய் பாதுகாக்க
பத்திரமாய் கிடைத்த உந்தன் நினைவு.
பாதைகள் மாறலாம்
கொள்கைகள் சிதறலாம்
ஏழேழு ெஐன்மமும் தொடர்ந்து வரும்
உந்தன் சுவாசம்.
கோல அழகை
புள்ளி வைத்து
வரைந்து முடிக்க
உந்தன் வருகைக்காய்
எந்தன் விழிகள்.
—-
thamarachselvan@hotmail.com

Series Navigation