தீர்மானிக்காதவரை.. .. ..

This entry is part of 72 in the series 20040415_Issue

பா.தேவேந்திரபூபதி


ஒட்டுப் போட்டு ஒட்டுப் போட்டு
நிறம் மாறிப் போனது
ஆடை மட்டுமல்ல
ஆசைகளும் மனதும் தான்!

விடியலும்
வியாபாரமாக்கப் பட்டதால்
சூரியன்களுக்குப் பதில்
நாளிதழ்களே
நாட்களை நிச்சயிக்கின்றன!

பொய்களுக்கு
புறமுதுகு காட்டிய நியாயங்கள்
அழுக்குக் கூடைகளில்
அடையாளம் தெரியாதபடி
நாளை, நாளையென
நாள் குறித்தன போராட..

இன்று நேற்றல்ல
என்றைக்குமே
இரவு மட்டும்தான் நிச்சயம்
பகல்களில்
அரிதாரங்கள் ளை மறைப்பதால்!

அரசியல் துர்வாசர்களின்
ஆத்திரத்தால்
அடையாளம் மறைத்தது
மனிதனல்ல
ஆன்மா!

சிந்திக்க சிந்திக்க
வாழ்க்கை கசந்தது
கனவுகளைக் கூடவா
காசு கொடுத்து வாங்குவது!
எதுவும் சாத்தியம்
தீர்மானிக்காதவரை!

—-
kousick2002@yahoo.com

Series Navigation