வேதனையின் நிழல்…

This entry is part of 47 in the series 20040325_Issue

மதுமிதா.


வேதனையின் நிழல்
காதலின் பார்வை
இதனினின்றும்
தப்பித்துவிட இயலாது
நினைவுகளை
அரவணைத்துக் கொள்கிறேன்
என் அருகில் நீ
உன் அன்பு
என்னைச் சுற்றி
அருகிலும்
தூரத்திலும்
அதன்
ஒளியின் பிரகாசத்தைப் பார்
மகிழ்வின் வெப்பத்தை உணர்
வேதனையின் நிழல்
ஓடிவிடும் கண்காணா தொலைவில்
வெளியெங்கிலும்
அன்பின்
அன்புப்பார்வை மட்டுமே…
==

மதுமிதா.
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation