தொடரட்டும் பயணம்…!!!

This entry is part of 47 in the series 20040325_Issue

பத்மநாதன் முத்துசாமி


மழையென நனைத்தாய்
வானில் திரையோ
பெய்யாமல் பொய்த்தாய்

நதியென நடந்தாய்
வழியில் அணையோ
என் வழி மறந்தாய்…

அஃதோடு முடிந்ததா உன் பயணம்.. ?!
இல்லையில்லை…!
இன்றும் எங்கோ விழுந்து
எங்கெங்கோ நடந்து
வேர்வழி நுழைந்து
என்னுள் கலக்கின்றாய்…!

ஆம்..
கால அரக்கன்
தடைபோட்டு தடுத்தபின்னும்
எப்படியோ…
என் வேர்களின் வாசலில்..உன் வாசம்…!!

இப்போது புரிந்துகொண்டேன்
கட்டுப்பாட்டுத்தடைகள் எல்லாம்
எனைனோக்கிய உன்
பயண மார்கத்திற்கு மட்டுமேயன்றி
பயணத்திற்கல்ல என்பதை…எனவே
தொடரட்டும்…
எனைனோக்கிய உனது பயணம்…!!!

padmanathanm@rediffmail.com

Series Navigation