ஈடன் முதல் மனிதம்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

மாலதி


தோட்டம் விட்டுக் கிளம்பி
எங்கே வந்து நின்று விட்டோம் ?

காடுகள் நகர்ந்து வந்து
போரிட நீயே வென்றாய்*

கடல்களை சூனியத்தில்
கட்டுவித்து உறைவித்தேன் நான்

வானத்தரை மேல் வலம்
காற்றாடிகள் கீழே விட்டோம்.
எனினும் கவலைப்பட்டோம்.

பட்டுச்சிறகுகளிடைக் கொம்புகள் முளைத்ததற்கு
பஞ்சுப் பாதங்களில் வந்து புது லாடம் சேர்ந்ததற்கு.

நேசத்தில் மூச்சு விட்ட நெருக்கம் நெடி யானதற்கு
மர்மங்கள் நழுவினதில் மயக்கத்தின் விடுபட்டதற்கு.

இருபத ஆணைகளில் இயக்கத்தை முடக்குகிறோம்
எண்ணியத்தில் எல்லாக்குரல்களைப் புலம்பெயர்த்தோம்.

மேல் போய் கீழ் வரும் ஊஞ்சல்களைத்
தோட்டத்தில் விட்டோம்.

அன்பே! அருளிச் செய்! நாம் ஜெனித்த முதல் நாளை

*மேக்பத் முடிவு காடுகள் நகர்வால் குறிக்கப்பட்டது.
மாலதி[தணல் கொடிப் பூக்கள் 2001 தொகுப்பிலிருந்து]
malathi_n@sify.com

***

Series Navigation

மாலதி

மாலதி