உண்மை ஆன்மீகம்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

சத்தி சக்திதாசன்


இரவினாடை இருளையணிந்த மனித இதயம்
இன்று மறந்த உண்மை நிச்சயமொன்று
இறைவன் அழைப்பு அவனுக்கு நிச்சயம்
இதை மறந்தவன் ஆடும் வாழ்க்கை பூச்சியம்
ஆசை களைந்து இன்பம் துறந்து – உலகில்
அமைதி காண விளயும் நோக்கம் வீணே ! கேளாய்
உழைத்து உந்தன் வாழ்வையுயர்த்தி – பரந்த
உள்ளம் கொண்டு நலிந்தவுயிர்கள் இரண்டிற்காவது
நல்லுணவு படைக்கும் வேளை ஒன்றேயாயினும்
நாளயயுலகின் துறவறம் இதுவே நினைவில் கொள்வாய்
சமூகமென்றொரு சந்தையிலே ஒதுக்கப்பட்டோர்
சந்ததி தலைநிமிர்ந்தொரு சங்கதி கூறிட – மனிதா
சிந்தித்து நீ புரிந்த செயலொன்றைச் செப்பிடு – இல்லையேல்
சிரிப்பை முகத்தினில் நிரந்தரமாகவே அகற்றிடு
செல்வக்கொழுப்பில் உணவதனையே வீசியெறிந்திடும்
செல்வந்தர் அற்றது அன்பேயென்று அடித்துக் கூறிடு
உறக்கம் வேண்டித் தினமும் மயக்கம் மதுவில் காணும்
உயர்ந்த மனிதர் அறியார் உலகில் தவிக்கும் உயிர்கள்
பசியெனும் அரக்கன் போடும் கூச்சலால் தினமும்
பலிகொடுத்தன உறக்கம் தனையேயெனும் உண்மை
வேண்டாம் இனியும் அறியா துறவெனும் ஆன்மீகம்
வேண்டும் உலகில் உதவும் உழைப்பாளிகள் அன்புமேகம்.

——————————-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்