முழுக்கண்ணையும் தொறந்திடு தாயீ!

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

கவியோகி வேதம்


பாதித்தூக்கத்துல எழுந்திட்டயோ பாரதத் தாயீ!-அதுனால
..பாதிசுதந்தரம் கிடைக்கலியே எங்களுக்குத் தாயீ!
சோதிச்சாலும் ‘வெள்ளை ‘ப்பசங்க சோறு போட்டாங்க!-இப்ப
..சொதந்தரம்னு வந்தபொறகோ பட்டினி தாயீ!..
ஆட்சிசெய்யத் தெர்யுமோடா உங்களுக்குன்னான்-ஒர்த்தன்
..அவன்வாக்கு பொய்க்கலியே பாரதத் தாயீ!
வோட்டுப்போடு நன்மைசெய்யறேன் என்று சொன்னாங்க!-பொறவு
..வோணமட்டும் சொரண்டிதிங்கறான் துண்டுப் பயலுங்க!
..
நீதூங்கயிலே காவிரித்தாயி இங்க ஓடினா!-நாங்க
..நினச்சப்பொலாம் நெல்விளச்சு ஊருக்கும் கொடுத்தோம்!
நீதூங்கிக் கண்விழிச்சு ‘ரவுடி ‘ங்க கையிலே-முழுசா
..நிறையசுதந்தரம் கொடுத்துப்பிட்ட, காவிரி வரல்லே!
..
நாத்தஅரிசி ரே ?ன்லகொடுத்து துண்ணுனு சொன்னான்!-இப்பவோ
..நாலுகாசு வச்சிருக்கேன்னு ‘கெளரவ ‘ப் பட்டைன்னான்!
சேத்தகாசும் கந்துவட்டிப் பசங்க புடுங்கி-எங்க
..செத்தபுழுக் கஞ்சியிலும் மண்ணப் போட்டுட்டான்!
..
சாணி,இலை ஒரத்துலெநாங்க பயிரை வளர்த்தோம்!-தடியனுங்க
..சரியில்லன்னு சீமைஉரம் கொடுத்துக் கெடுத்தான்!
போணிஆவல தாயீஎங்க மண்ணுல வெள்ளாம!-இவுங்க
..பொடிமட்டைக்கும் அமரிக்காகிட்ட கைய ஏந்துறான்!
..
சத்தமில்லாம ஆட்சிசெஞ்சாரு காமராசரு!-அவுருதான்
..சத்தியமா ஒம்புள்ளன்னு நெனச்சு மகிழ்ந்தோம்!
சுத்துமுத்தும் வெளக்கும்,அரிசியும் வந்து நெறஞ்சுது!-இப்போ
..சுத்திப்பார்த்தா இருட்டும்,வறுமையும் வந்து கவிஞ்சுது!
..
ஆட்சிசெய்யறேன்னு சொல்லிப்புட்டு ‘சவுண்டு ‘ கொடுக்குறான்!-செய்யுற
..அநியாயத்தக் கூச்சல்போட்டே மறைக்கப் பாக்குறான்!
காட்சியெல்லாம் ‘பசுமை ‘யில்லே பாரதத் தாயீ!–முழுசா
..கண்ணத்தொறந்து எங்களுக்கொரு வழிசொல்லு தாயீ!
****************************(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்