நிராகரிப்பில்…

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

வேதா மஹாலக்ஷ்மி


அடிமனதில் கூடுகட்டி
ஆழம் தோண்டி உயிர் செய்து
அடைகாத்து நிற்கிறேன் – என்
அணுவெல்லாம் மொத்தமாய்
கருவாக்கி நிற்கிறேன்….

என்
உயிரில் கொஞ்சம், உணர்வாய் கொஞ்சம்
உதிரம் உருவாக்கி நிற்கிறேன்…

பழகிய தனிமையில்
பாதி விழி பனித்திருக்க
வழிபார்த்து நிற்கிறேன் – உன்
திருமொழி பார்த்து நிற்கிறேன்…

கோபுர கலசத்திலோ
கொஞ்சிடும் மழலையிலோ
என் கார்குழல் இடையிலோ – நான்
கரைத்திடும் இசையிலோ..
கொலுசு சிணுங்கலிலோ
கொல்லைத் துளசியிலோ
கண்ணுக்குத் தெரியாத
கருப்பு இருட்டிலோ….
என் கடைசி கவிதையிலோ…..

கலந்து , நிச்சயம் நீ வருவாய்!
என்
உயிரோடு கலந்து வைக்க
உணர்வையும் நீ தருவாய்!

என் கூட்டைத் தாண்டி
வெளுயேறிய காற்று,
தென்றலாகித் திரும்பும் நிச்சயமாய்!

இலைகள் கொஞ்சம் உதிர்வது கூட,
இனி, வேரின் ஈரம் நுனிவரத் தானே ?

piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி