பட்டாபிஷேகம் நடக்கிறது…

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

கவியோகி வேதம்


பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ!-கம்பன்
..பந்தியிலை போட்டாச்சு!
பட்டாடைக் கவியுடுத்தும்-நண்பர்களே!
..பருகஒரு விருந்தாச்சு!-நீங்கள்
..பருக ஒரு விருந்தாச்சு!
..
வால்மீகி சொத்துதந்தான்!-நம்கம்பன்
..வாரிசாக தனைவரித்தான்!
கால்தொட்டு கும்பிட்டான்!-தனிவழி!
..கனஜோராய் விருந்துவைத்தான்!(பட்டாபி..)
..
தசரதச் சக்ரவர்த்தி-பாயசத்தால்
..தான்,பாத்தி ரம்படைத்தான்!-நான்கு
.தான்,பாத்தி ரம்படைத்தான்!
அசல்கம்பச் சக்ரவர்த்தி-பல-பாத்திரம்
..அவன்திறத்தால் படைத்துவிட்டான்!-அவற்றை
..அழகாய்-வ-ளர்த்தும்விட்டான்!(பட்டாபி..)
..
தசரதன்ஓர் பாத்திரத்தை-காட்டுக்கே
..தாரைஎன வார்த்துவிட்டான்!
நிசமாயோர் மனைவிசெய்யும்-சில
..நித்தியக் கடமைக்காய்..-உணர்ச்சி
வசப்பட்டான்,வரம்தந்தான்!-பெண்ணிடம்
..வசமாக மாட்டிநின்றான்!
..
அவனிழந்த பாத்திரத்தில்-கவிராஜா
..அங்கமெல்லாம் ஒப்படைத்தான்!
சுவைசேர்த்து,அமுதம்கலந்து,-அவனுக்காய்ச்
..சொல்லாலே கோவில்சமைத்து,
நவநவமாய் அணிவித்து,-இ இழைத்திழைத்து,
..நாட்டுக்குள் கூட்டிவந்தான்!-ஆம்!காவ்ய
..நாட்டுக்குள் கூட்டிவந்தான்!(பட்டாபிஷேகம்)
..
யாருக்காய் வரம்தொலைத்து,-சக்ரவர்த்தி
..யமன்தனையும் வரவழைத்து,
சீர்பலவும் இ ழந்தானோ-அப்பாத்திரம்
..சீர்-ஏற்க மறுத்துவிட்டு,
ஓர்உயர்ந்த பாதுகையைச்-செங்கோலாய்
..உயரத்தில் வைத்ததனால்,-நம்ராஜா
..ஓர்-சிம்மா சனம்தந்தான்!–காவ்யத்தில்
..உயர்த்திவைத்தே பதவிதந்தான்!(பட்டாபி..)
..
இ இப்போது சொல்லுங்கள்-நண்பர்களே!
..எந்தராஜா மனம்கவர்ந்தார் ?
தப்பாமல் நமக்கெல்லாம்-தன்வரத்தால்
..தனிவழியில் கவிவிருந்து-நம்நாட்டுக்கு
அப்பாலும் மகிழ்ந்துதந்து–தமிழுக்கே
..அரியணையைப் பெற்று(உ)வந்த,-நம்நெஞ்சில்
எப்போதும் வீற்றிருக்கும்- இவரா ?அவரா ?
..ம்ம்!அயோத்தியா ? தேரழுந்தூரா ?
..
பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ,கம்பன்
..பந்தியிலை போட்டாச்சு!
பட்டாடைக் கவியுடுத்தும்-கவிஞர்-நீங்கள்!
..பருகஒரு விருந்தாச்சு!

^^(கவியோகி வேதம்)23-09-03

sakthஇa@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்