இலக்கணக்குழப்பம்

This entry is part of 37 in the series 20030530_Issue

மீ.வசந்த்,சாத்தூர்


எப்பவும் போல்
வீரப்பன்
தப்பித்து கொண்டேயிருப்பதும்,

முதல்வருக்கு முன்
நம்
காக்கிச் சட்டைகள்
கரகாட்டம் ஆடுவதும்,

சேலை கட்டிய
சின்னக் குழந்தைகள்!! ?
தீப்பெட்டி செய்வதும்,

சட்டசபையில்
சண்டைகள் நடப்பதும்,

தஞ்சாவூர் பொம்மைகள்
மந்திரிகள் ஆவதும்,

சாதி மதங்களுக்குள்
சண்டைகள் வருவதும்,
அதனால் கொஞ்சம்
ஜனத்தொகை குறைவதும்,

இலக்கியவாதிக்கு
தலைக்கனம் இருப்பதும்,

அரசியல்வாதிக்கு
அநாமத்து நிலங்கள்
அடைக்கலம் கொடுப்பதும்,

காஷ்மீர் வெடிப்பதும்,
அஹிம்சை பேசி
இந்தியா
பல் இளிப்பதும்,

இன்னொரு பானிபட்
இராமருக்கும் பாபருக்கும்,
நடந்து கொண்டேயிருப்பதும்,

விட்டால் போதுமென்று
என் போன்ற
படித்த முட்டாள்கள்
நாடுவிட்டுச் செல்வதும்,

நமக்கு
இறந்த காலமா ?
நிகழ் காலமா ?
எதிர் காலமா ? ? ?

meenatchivasanth@rediffmail.com

Series Navigation