நடிகர்கள்!

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

வ.ந.கிாிதரன்


இந்த நாடக மேடையில்

நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்

அழுவதா சிாிப்பதா என்று

சில நேரங்களில் தொிவதில்லை.

இவர்களுக்கோ தாங்கள் பிறவி

நடிகர்கள் என்ற அடிப்படை

உண்மை கூடத் தொியவில்லை.

தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்

கொண்டே நடித்துக்

கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களில் ஒருவன் என்ற வகையில்

என்னையும் சேர்த்துத் தான்

கூறுகின்றேன்.

எவ்வளவு தேர்ச்சி பெற்ற

நடிகர்கள் இவர்கள்.

எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு

தத்ரூபமாக இவர்களால்

முகபாவங்களைக் காட்ட முடிகின்றது ?

உருகுவதிலாகட்டும் அசடு வழியக்

குழைவதிலாகட்டும்

என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள் ?

இந்த நாடக மேடையிலிருந்து

விடுபட வேண்டுமென்று தான்

இத்தனை நாளாக முயன்று

கொண்டிருக்கின்றேன்.

திமிர் பிடித்தவன். மாியாதை தொியாதவன்.

கர்வம் கொண்டவன். வாழத் தொியாதவன்.

எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து

கத்துகின்றார்கள்.

நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே

நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்

ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்

என்னைப் பார்த்துப்

‘பார் இவனது அபாரமான

நடிப்பை ‘யென்று.

என்ன நடிகர்களிவர்கள் ?

தங்கள் நடிப்பை விட

என் நடிப்பு அபாரமானது

என சான்று வழங்கும்

பெருந்தன்மை மிக்க

மகா பொிய நடிகர்களே!

உங்கள் பெருந்தன்மைக்காக

உங்கள் கருணைக்காக

உங்கள் அனைவருக்கும்

எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்

உாித்தாகுக.

மகாபெரும் கவிஞராக, அற்புதப்

படைப்பாளியாக, மூதறிஞராக,

அதிமேதாவியாக,சமூகத்

தொண்டராக, தலைவராக

எத்தனை விதமான வேடங்களில்

நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!

உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு

வசிட்டர் வாயால் கிடைத்தது போல்

எத்துனை பெருமை மிக்கது. அதற்காக

எனது ஆயிரம் ஆயிரம் கோடி

நன்றிகள்!

இந்த நாடக மேடையில் முற்றாகவே

நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது

இயலாததொன்று என்பதை உணர

முடிகின்றது. இருந்தாலும்

நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்

தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.

அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்

அற்புதமான நாடக மேடையிது.

இங்கு நடைபெறும் நாடகங்கள்

அனைத்துமே திரை விழும் வரை

தான். விழுந்த பின்னும்

நடிப்பில் தேர்ச்சி பெற்ற

நடிகர்கள் நாடகத்தைத்

தொடரத் தான் செய்வார்கள்.

இந்த நாடக மேடையில்

நடிப்பதென்பது மட்டும்

தான் நித்தியம்.சாசுவதம்.

நிரந்தரமானதொரு திரை

என்று ஒன்று உண்டா

இதன் நிரந்தரத்தை

நிரந்தரமின்மையாக்க ?

யாருக்கும் தொியாது ? அவ்விதமொரு திரை

இருக்கும் பட்சத்தில்

அவ்விதம் விழும் திரை கூட

இன்னுமொரு பக்கத்தில்

ஆரம்பமாகுமொரு நாடகத்தின்

தொடக்கமாகவிருக்கலாம் ?

யார் கண்டது ?

பாத்திரங்களிற்கா

குறைவில்லை ?

ஆக,

இருக்கும் வரை

நடித்துக் கொண்டேயிருப்போம்

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்