கவலையுள்ள மனிதன்!
வ.ந.கிாிதரன்

எனக்குச் சாியான கவலை.
எதற்கெடுத்தாலும்
எப்பொழுதும்
ஒரே கவலை தான்.
கவலைக்கொரு எல்லை
வேண்டாமா ?
என்ன செய்வது ?
குப்புறப் படுத்தால் பின்னால்
வானமே இடிந்து விழுத்து
விட்டாலென்ற கவலை.
அதற்காக மல்லாந்து படுக்கவா
முடிகிறது. முடிந்தால்
விழுகிற வானத்தைத்
தாங்குவதெப்படி என்கிற
கவலை.
யாருக்குத் தான் என் கவலை
புாியப் போகின்றதோ ?
சும்மாவா சொன்னார்கள்
அனுபவித்துப் பார்த்தால் தான்
தொியும்
அவரவர் கவலை அவரவருக்குப்
புாியுமென்று.
***
ngiri2704@rogers.com