சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

சித்தார்த் வெங்கடேசன்


வேறு

விதைகள்

பேருந்து நிலையம்.

என்னை அன்னியப்படுத்திவிட்டு வேகமாய் போகும் வாழ்க்கை.

தூனில் சாய்ந்தபடி பீடி பிடித்து பசியாரும் கிழவி.

மூடிய ஜன்னல்களை வெறித்துப்பார்க்கும் லாட்டரி சிறுவன்.

சம்பலத்தை பறிகொடுத்து செய்வதரியாது முழிக்கும் பயணி.

எதற்கோ அடிபோட்டு அழத்தொடங்கும் சிறுமி.

வாழ்க்கையெங்கும் பரவிக்கிடக்கின்றன

கவிதையின் விதைகள்.

———-

பாலம்

என்னுள் உருகொண்ட மொழியற்ற பிழம்பை
உன்னுள் செலுத்த,

காலம், இடம், மொழி
என முப்பரிமானத்தில் கட்டுகிறேன்
பாலமாய்
இக்கவிதையை.

———–

ஆயுதங்கள்

‘பூவு, மல்லி, சாமந்தி, கனகாம்பரம் பூவு………. ‘

’10தே ரூபாய்ல கோடாஸ்வரனாக இன்னைக்கே வாங்குங்க தமிழ்நாடு பம்பர் லாட்டரி……….. ‘

‘அன்னக்கிளி, அய்யா பேருக்கு ஒரு நல்ல சீட்ட எடுத்துக்கொடு………… ‘

‘ஆகயால் உங்கள் பொன்னான வாக்குக்களை எமக்கே இடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ‘

வாழ்க்கை போரில் ஆயுதங்கள் சில.

————

துருவ நிலை.

கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே உண்டு
அனேகம் கோடி நிறங்கள்.
துருவங்களை விட்டு இறங்கினால் தெரியும்,

திரும்பி பார்க்க செய்யாதவற்றிலிருந்து மிளிரும் அழகு.
****
siddhu_venkat@yahoo.com

Series Navigation

சித்தார்த் வெங்கடேசன்

சித்தார்த் வெங்கடேசன்