அரிப்பு

This entry is part of 29 in the series 20020617_Issue

ஸ்ரீனி.


இரவில் காவல் நின்று
பகலில் படுத்துறங்கும் பால் நிலா,
மணலை சுத்தம் செய்ய
மறுபடி மறுபடி முயலும் அலைகள்,
பூப்பில் சிவந்து புன்னகைக்கும்
சட்டி சிறை ரோஜா,
மஞ்சள் கதிரைக் கொண்டு
தினம் தினம் வாசல் தெளிக்கும் சூரியன்.
ஏனோ ஒரு அனுதாபம் !

தசைகள் சுருங்கி
பற்கள் இடம்பெயர்ந்து
கண்கள் உள்வாங்கி
கால்கள் தடுமாறும்.
தோலின் பிடி தளர்ந்து போய்,
கூடு தொய்ந்து கூட வரும்,
ஓயும் போதும் ஏதோ ஒரு
ஒயாத அனுதாபம்.
மரிப்பது மனிதன் மட்டும்
மனதிற்கு தெரிவதில்லை !

***
Ramachandran_Srinivasan@eFunds.Com

Series Navigation