This entry is in the series 20020617_Issue

கோமதி நடராஜன்


செங்கல் இல்லை சிமெண்ட் இல்லை
தானாய் வளர்ந்தது,பள்ளிக்கூடம்
காம்பவுண்ட் இல்லை கட்டிடம் இல்லை,
கம்பீரமாய் துவங்கியது,கல்லூாி
பாடம் இல்லை,பாிட்சை இல்லை
ஓங்கி நின்றது,பல்கலைக் கழகம்.
இங்கே,நம் எதிரே
வந்து போவோரெல்லாம்,
ஆசிாியர்.
பகலவன் விழித்தால்,
பள்ளிக் கூடம்.
விழுந்தால் விடுமுறை.
காசு கொடுக்காமல்,
கற்றுக் கொண்டேன்
காாியவாதிகளைக்
கண்டுபிடிக்க.
ஏடு தொடாமல்,
புாிந்து கொண்டேன்,
எத்தர்களைக்
கண்டுபிடிக்க.
பட்டம் இல்லை சான்றிதழ் இல்லை
ஆனாலும் கிடைக்கும்
‘அனுபவசாலி ‘என்ற
அழகான பட்டம்.

ngomathi@rediffmail.co

Series Navigation