எங்களின் கதை

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

இளங்கோ


சந்திப்புக்கள்
அசாதாரணமாய் சம்பவிப்பவை

வெயிலின் கொடுமைதாளாது
ாீடோ ஆற்றில் கைகள் அளைந்து
என் விம்பந்தேடி
வெறுமை பெருகியவேளையில்தான்
நிகழ்ந்தது நினது நதியுலா

உன்னை
சில விாிவுரைகளில் சந்தித்திருக்கின்றேன்
சகமாணவியென்ற முறையில்
அறிமுகங்கள்
புன்னகையுடன் முடிவதுண்டு

கோடை முறைத்து
மரங்கள் மெளனங்காத்தபொழுதில்
படிக்கும்பாடங்கள் குறித்து
நீ சல்லாபிக்காதிருந்தது
நீர்வீழ்ச்சியானது மனதிற்கு

எதிர்கால இலக்குகள் குறித்தும்
ஆச்சாியமாய் இலக்கியம் சார்ந்தும்
பேசினோம்
இலத்திரனியல் கற்று
சடப்பொருளாகிய நாங்கள்

வேற்றுமொழி இலக்கியத்தின்
போதாமையைத் தெளிவுபடுத்த
ஈழத்துப்படைப்புக்கள் பேசுக என்றாய்

பின்னும்,
உனக்கொரு தாய்மொழியில்லாத
காலத்தின் கொடுமையினை
மூதாதையர் வேர்கள் தேடி
கயானா செல்லல்
சாத்தியமற்றதை
பதிவசெய்தாய் உடைந்தகுரலில்

இப்படித்தான்
எல்லாவற்றையும் இழந்துவந்த
ஏதிலியென்ற புனைவுதான்
எமை இணைந்திருக்கக்கூடும்
வாழ்வுப் புள்ளியில்

சந்திப்புக்கள் நீண்டன
புாிதலும்தான்.

தொலைதுார கிராமமொன்றில்
காம்பிங்கில்,
குடித்துக்கிறங்கி
உனையணைத்த பின்னிராவேளையில்
நாமிணைந்து வாழும்
விருப்பினை விளம்பினாய்

நம்முறவின் நிமிர்த்தம்
விாியும் இப்பொழுதுகளில்
இலகுவாய் உளது
சடங்குகளை தவிர்த்து
தனித்து வாழல்

நேற்றினைப்போல்
கற்றல் வன்முறையாய்
கரைதாண்டமுடியாக் கடலாய்
கனவுகளில் பயமுறுத்துவதில்லை
உன்விரல்கள் பின்னிநடனமிடும்
இந்த இரவுகளில்.

2001.06.15

Series Navigation

இளங்கோ

இளங்கோ