கொடியேற்றம்

This entry is part of 26 in the series 20020210_Issue

முத்துக்குமார் பொன்னம்பலம்


குழந்தைகள் மனம்மகிழ
விடுமுறை விடப்பட்ட
ஆண்டின் யிருதினங்களிலும்,
சென்றமுறை மடித்து
பத்திரப்படுத்தப்பட்ட கொடியில்
மலர்களிட்டு மடித்து,
துலங்கப்பட்ட கம்பத்தில்
உதிர ஏறின
கொடியோடு விழியுயர்த்தி
அனிச்சையாய் கையுயர்த்தி
கொடிவணக்கம் செய்து
‘பட்டொளிவீசி பறக்குது பாரீர் ‘ பாடி
உயர்ந்த தலை தாழ –
உருண்ட துளிகளுள்
உதிர்ந்த ஒன்று
யினிப்பதற்குப்பதில்
கசக்கிறது.

Series Navigation