எதற்கும் தயாராகி நிற்போம்!

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

கவிமாமணி வேதம்


நாடு போகும் நிலை-அறிந்தோம்!-நம்மை
..நாமே ‘பார்க்கத் ‘ தெரிந்துகொள்வோம்!
கோடு, புள்ளி பழகிவிட்டோம்;-அழகுக்
..கோலம் வரைய முயற்சிசெய்வோம்!

விண்ணில் மின்னல் அச்சுறுத்தும்!-முளைத்த
..வேர்கள் பயத்தில் பலமிழக்கும்!
மண்ணில் பலவாய்த் தடை-முளைக்கும்;-iருந்தும்
..மனத்தில் ‘காளி ‘ அருள்-பலக்கும்!

மதுவின் iடத்தை அறிந்துகொண்டால்,-தேனீ
..மகிழ்வோ டருந்தத் தொடங்காதா ?
சுதியின் ‘கதி ‘யைப் புரிந்துகொண்டால்,-வாயும்
..தூய ‘கீதம் ‘முழங்காதா ?

நாட்டைத் ‘தூக்கி ‘ நிறுத்திடுவோம்!-நமது
..நரம்பைத் ‘தவமாய் ‘ மாற்றிடுவோம்!
கேட்டை ‘, ‘மூலம் ‘ பாராமல்,-ஒளியைக்
..கிழித்தே செல்லப் பயிற்சிசெய்வோம்!

*******
கவிமாமணி வேதம்**

Series Navigation

(கவிமாமணி வேதம்)

(கவிமாமணி வேதம்)