எட்டாத தொலைவு

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

தேன்சிட்டு


அம்மா மறந்ததென்ன ?
அப்பா மறந்ததென்ன ?
அண்ணா நீயும்,
என்னை ம்றந்ததென்ன ?

நான் மாறிவிட்டேன்,
நான் மாறிவிட்டேன் ….
சுத்தமாக விலக்கிவிட்டேன்,
உங்களை என்னிடமிருந்து.
இதைச் சொல்வதில்
மிகுந்த வருத்தமெனக்கு ….

பயந்தவளென்றும்,
பாவமென்றும்,நான்
சாதுவென்றும் ….
சொல்லி,சொல்லி
பாதுகாத்ததென்ன ?

இன்றோ எட்டாத தொலைவு,
நம்மிடையே …

என்னை தேடி வராதீர்கள் !
எனக்குள்ளே நான்,
தொலைந்த பிறகு
இதென்ன இறுதி ஆசை போல்
உங்கள் நினைவு ?

நானில்லாமல் நீங்கள்,
என் எண்ணங்களோ
உங்களைச் சுற்றித்தான்.
என் வாழ்க்கை
ஏன் இப்படி ?

என் வாழ்வில் நீங்கள்
வந்து போகும் அத்தியாயங்கள்
முடிந்தே விட்டன, என்றாலும்
மனதில் சில
ஈரங்கள் மிச்சமிருக்கிறது,
கண்ணிர் துளிகளாய் …….

———————–

Series Navigation

தேன்சிட்டு

தேன்சிட்டு