மதுமிதா
சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது? ஆசாபாசங்களைவிட்டா? தீயபழக்கங்களை அல்லது தீய எண்ணங்களை விட்டா? எனில் நல்லது என்றால் என்ன? தீயது என்றால் என்ன? இதிலிருந்தெல்லாம் எப்படி சுதந்திரம் பெறுவது? எனில் எது சுதந்திரம்? அந்த சுதந்திரம்
கிடைக்கப் பெற்றிருக்கிறோமா?
இவ்வுலகில் உதித்து உதிர்ந்த எத்தனையோ மகான்கள் எவ்வளவோ கருத்துகளை மக்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எல்லா தளைகளிலிருந்தும்
விடுபடவே, சுதந்திரத்தை முன்னிறுத்தியே சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர். அவை ஒட்டியும் வெட்டியும் மனித மனங்களுக்கேற்ப எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இங்கே எதிலெல்லாம் சுதந்திரம் இருக்கின்றன என பார்த்தோமென்றால், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இதன் பொருள் மாறுமா? மாறாதிருக்குமா?
கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்றால், சொன்ன கருத்துக்காகவே வெறுக்கப்படும் மனப்பான்மையே இங்கே அதிகமுள்ளது. கருத்தை எதிர்க்கிறோம் கருத்தைச்
சொன்னவனையல்ல என்னும் மனோபாவம் இன்னும் இல்லை இங்கே.
பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றால், பேசிய ஒரே காரணத்துக்காக தனியான ஒரு முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறான்.
மொழி சுதந்திரம் இருக்கிறதா என்றால் மொழியாலேயே பிரிக்கப்பட்டு விரோதம் கற்பிக்கப்படும் சூழலும் உள்ளது.
மத சுதந்திரம் உள்ளதா என்றால், தனக்குப் பிடித்த மதத்தை தேர்ந்தெடுப்பவன் அல்லது மதமே வேண்டாமென இருப்பவன் மததீவிரவாதியாகவோ, நாத்திகனாகவோ ஒவ்வொரு கேட்டகரியில் அடைக்கப்படுகிறான்.
தேச சுதந்திரம் உள்ளதா என்றால் இரு உலகப்போருக்குப் பின்னும், விலங்கிலிருந்து பரிமாணம் பெற்ற மனிதம் இன்னும் இரத்தவாடையை ருசிக்க நாக்கைச் சுழற்றிக்கொண்டு பதுங்கிக் காத்திருக்கிறது.
அரசியல் சுதந்திரம் உள்ளதா என்றால் இடியாப்பச் சிக்கலுக்குள் ஒளிந்துகொண்டு வெந்துகொண்டிருக்கிறது.
தனிமனித சுதந்திரம் என்றால் கேலிக்கூத்தாகிவிட்டது.
பாலியல் சுதந்திரம் என்றால் பேசப்படக்கூடாத பொருளாகிவிட்டது.
அடிமைச் சங்கிலியை தகர்த்தெறிந்து சுதந்திரமாக இருக்க வேண்டி எடுக்கப்பட்டதே மனிதப்பிறவி. அடிமைச்சங்கிலியென ஒன்று இருக்கும் பட்சத்தில், பார்வைக்குத் தெரியும்படியாகவோ, பார்வைக்கு அகப்படாத அடிமை விலங்கை ஏற்றுக்கொண்டாலோ, அதை வலிமையுடன் உடைத்தெறிந்து அதிலிருந்து முற்றும் விலகி சிறகடிக்க வேண்டுமென்பதே அடிப்படை நோக்கம். எனில் எது சுதந்திரம்?
அன்புடன்
மதுமிதா
madhuramitha@gmail.com
- அக அழகும் முக அழகும் – 1
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- தருணம்/2
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- தேடலின் தடங்கள்
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- கவிதைகள்
- என்றும் நீ என்னோடுதான்
- “மறக்கவே மாட்டோம்”
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- ஊர்க்கிணறு
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ரெண்டு சம்பளம்
- தயிர் சாதம்
- நினைவுகளின் தடத்தில் – 15
- வயதில்லாமல் வாழும் உயிர்
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- எது சுதந்திரம்?
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- தொலைந்த வார்த்தை
- ஏமாற்றங்கள்
- வன்முறை
- குயில்க்குஞ்சுகள்
- எட்டு கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- “தொலையும் சொற்கள்”