குழந்தைகளுக்கான தோட்டம்!

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

டாக்டர். எம். ராஜலெட்சுமி


நல்லதொரு சூழல் நம் சுற்றுப்புறத்தில் உருவாக வேண்டுமானால்… குழந்தைகளுக்கு தோட்டக்கலையை முறையாகக் கற்றுக்கொடுங்கள் என்று ஒரு சொல்வழக்கே உண்டு. மிக எளிமையான சொல்வழக்காக இது தெரிந்தாலும், உண்மையில் பல்வேறு நல அம்சங்களைக் கொண்டது.
குழந்தைகளுக்கு எதையும் நல்லமுறையில் கற்றுக்கொடுப்பது என்பது பெரியவர்களான நம்கையில்தான் உள்ளது.
குழந்தைகள் உலகம் அற்புதமானது. தான்வாழும் இடத்தில் நிகழும் விஷயங்களை தொ¢ந்து கொள்வதில், குழந்தைகளின் ஆர்வம் எப்போதுமே குறைவதில்லை. ‘இது என்ன… இது எதுக்கு… இது எப்படி?’ என்பது அவர்களுக்குள் இருக்கும் தேடலின் அடிநாதம்!
அவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும் பட்சத்தில், அடுத்தடுத்த கேள்வியின் ஆழம் வியப்பை ஏற்படுத்தும். பதில்பெற இயலாத குழந்தைகள் தான் முடங்கிப் போகிறார்கள்.
அதுபோல எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு அதிகம். விளையாட்டுப் போல எடுத்துச் சொல்லும் விஷயங்களை அவர்கள் வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். தோட்டக்கலை, குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது. கற்றுக்கொள்வதற்கு அதில் நிறைய விஷயங்களும் இருக்கின்றன. தோட்டக்கலை மூலம் குழந்தைகள், உருவாக்குதல், பராமா¢த்தல், பயன்பெறுதல் எனும் படிக்கட்டுகளைக் கடந்து, அந்த உலகத்தில் சஞ்சா¢க்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
தோட்டம் அல்லது தோட்டக்கலை பற்றித் தொ¢ந்து கொள்ளும் இடங்களாக, பொதுவான இடத்திலுள்ள பூங்காக்கள், மழலையர் பள்ளிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களாக மட்டுமே உள்ளன.
குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்க, அவர்களுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். அந்த இடத்தில் நம்முடன் சேர்ந்து அவர்கள் பணிமேற்கொள்ளும்படி செய்திட வேண்டும். விதை விதைப்பது எப்படி… செடி நடுவது எப்படி… பூக்கள் எவை… காய்கள் எவை…என்பதை நாம் தான் சொல்லிக் கொடுக்க வேணடும். விளையாட்டுபோல இதை விளக்கினால், மிக எளிதில் அவர்கள் மனதில், இது பதிந்துவிடும். அவர்களுக் கும் தோட்டக் கலையில் ஈடுபாடு வந்துவிடும்!
குழந்தைகளுக்கானத் தோட்டம் அமைக்கும் போது, அது பாதுகாப்பானத் தோட்டமாக அமைந்திட வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.
தோட்டத்தின் வேலிகளாக ரோஜா, மூலிகைச்செடிகளை உட்புறமாக நட்டு வைக்கலாம். அது தோட்டத்துக்கு அழகையும் கூடுதல் பாதுகாப்பை யும் அளிப்பதாக இருக்கும்.
தோட்டத்தில் பயிர்களுக்கு உரம், மருந்து அடித்த நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்கு குழந்தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. உரம் மற்றும் மருந்தின் வீ¡¢யம் காற்றில் கலந்தே இருக்கும். அது சில வேளைகளில், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவித்து விடலாம். அதுபோல உரம், மருந்து அபாயம் குறித்தும் குழந்தைகள் பு¡¢ந்துகொள்ளும் வண்ணம் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
வீட்டிற்குள் தோட்டம் அமைப்பதாக இருந்தால், பெட்டிகள், பூந்தொட்டிகள், ஷ¥க்கள் ஆகியவற்றிலும் கூட அமைக்கலாம். இவை குழந்தை களுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காதவை. வித்தியாசமான அனுபவத்தையும் அவர்களுக்கு கொடுக்கும்.
குழந்தைகளுக்கானத் தோட்டத்தில் ஊஞ்சல், தூக்குத் தூக்கி ஆகியவற்றையும் அமைக்கலாம். ஒருவேளை இடப்பற்றாக்குறை இருந்தால், அதனை விட்டுவிடலாம். இவையிருந்தால் குழந்தைகள் கூடுதலாக சில மணிநேரத்தை தோட்டத்தில் செலவிட வாய்ப்பு இருக்கும். இதன் மூலம் கூடுதலாக சில விஷயங்களைத் தொ¢ந்து கொள்ளும் சந்தர்ப்பம் அதிகா¢க்கும்.
குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்குதன் மூலம் அவர்கள் தாவரங்களைப் பற்றிய ஞானம் பெறுவதுடன் அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான ஆர்வமும் கொள்வார்கள். செடிகளை யாரும் பிடுங்கவோ சேதப்படுத்தவோ முடியாது. அதைக் குழந்தைகள் அனுமதிக்க மாட்டார்கள்.
குழந்தைகளிடம் ஒரு செடியைக் கொடுத்து, அதன் பயன்பாட்டையும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் காட்டும் ஈடுபாட்டில் ஒரு தோட்டமே உருவாகி விடும்!
தாவரங்களிடம் அவர்கள் காட்டும் ஆர்வத்துக்கேற்ப சில சலுகைகளையும் கொடுத்துப் பாருங்கள்…
நல்லதொரு சூழல் நம்சுற்றுப்புறத்தில் உருவாகிவிடும்!


landscaping_greenworld08@rediffmail.com

Series Navigation

டாக்டர். எம். ராஜலெட்சுமி

டாக்டர். எம். ராஜலெட்சுமி