புலம் பெயர் வாழ்வு (4)

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

இளைய அப்துல்லாஹ்


லண்டனில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த போது எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. ~~அண்ணா! உங்கள் நிகழ்ச்சி என்னைப் போன்றவர்களைப் பற்றியது. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச முடியாமல் போனது எனது கவலைகளின் காரணமாக அழுது விடுவேன் என்ற அச்சம். உண்மையில் குடும்பங்கள் தொடர்பான அதன் அர்த்தப்பாடுகள் தொடர்பான நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்பொழுதாவது எமது தமிழ் சமூகத்துக்கு விளங்குமா என்ற ஏக்கமே எனது நெஞ்சில் இருக்கிறது. எனக்கு இரண்டு பிள்ளைகள். கணவன் என்னை விட்டுப் போய்விட்டார். நான் இரண்டு பிள்ளைகளோடும் பெண்கள் நலன்பூி நிலையத்தில் இருக்கிறேன் ஏதோ சுவிற்சலாந்தில் இப்படி வசதி இருக்கப்போய் சாி. இல்லாவிட்டால் நானும் பிள்ளைகளும் எமது அடுக்குமாடி வீட்டில் இருந்து குதித்து செத்திருப்போம்.||

“உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டேன். “கணவன் சுவிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திருமணம் பேசப்பட்டது. நான் வவுனியாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு மூன்று பெண் சகோதரர்கள். அப்பா விவசாயி… சீதனமில்லாமல் என்னைக் கேட்டார்கள். அப்பா கட்டி வைத்து விட்டார். ஆனால்….” அழத் தொடங்கிவிட்டாள் அந்தப் பெண்.

“சுவிற்சர்லாந்து வந்து இரண்டு பிள்ளைகள் பிறக்கும் வரை என்னோடு இருந்தவர் பின்னர் ஒரு சுவிஸ் பெண்ணோடு தொடர்பு உண்டாகி எனக்கு அடி உதை.. தினமும் வீட்டுக்கு நேரம் சென்று வருவார். ஆரம்பத்தில் கேட்டபோது, அடிக்க ஆரம்பித்தார். பின்னர் அடிக்கத் தொடங்கியவர் பிள்ளைகளையும் தாக்கினார். என்னைப் பைத்தியக்காாியென்று சொல்லிச்சொல்லி ஏசுவார். உண்மையில் எனக்குப் பைத்தியமாக இருக்குமோ என்று யோசித்து யோசித்தே என் தலைக்குள் ஏதோ செய்கிறது. உண்மையிலேயே நான் பைத்தியக்காாி ஆகிவிட்டேன் அண்ணா!”

எமது கிராமங்களில் இருந்து தினமும் ஐக்கிய இராச்சிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களில் தமிழ்ப் பெண்கள் திருமணத்திற்காகப் போகிறார்கள். அவர்கள் போய் இறங்கியவுடன் முதலில் ஒரு “கலாசார அதிர்ச்சி” யை முகம் கொள்கிறார்கள். அது படித்த படிக்காத பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் ஏற்படுகிறது.

புலம் பெயர் நாடுகளில் உள்ள ஆணாதிக்க மனோபாவம் மற்றும் கலாசார ஒவ்வாமை, மொழி அறியாமை இவைகளினால் அதிகம் துவண்டு போவது பெண்கள் தான்.

எல்லாம் சாி, அது அப்படித்தான் இருக்கும் என்ற மனோபாவத்துக்குள் எமது பெண்களை அவர்கள் மனங்களை உட்படுத்தவும் தைாியப்படுத்தவும் முடியாது.

எனது நண்பன் சொன்னான், அவன் உளவியல் சார்ந்த படிப்பை மேற்கொண்டிரக்கிறான். “ஏன் வெள்ளைக்காரப் பெண்கள் ஆண்களின் (லிவ்விங் ரு கெதர்) சேர்ந்து வாழல் போல எமது பெண்களும் ஆண்களும் சேர்ந்து வாழ்ந்து விட்டு தைாியமாக இருக்கலாம் தானே. பிாிவது என்றால் தைாியமாகப் பிாிவது பின்னர் உறுதியாக வாழ்வது.

இதில் ஒரு பாாிய சிக்கல் இருக்கிறது. எமது தேசத்தின் ஊாின் வழமைகள் எம்மில் ஒட்டிக்கொண்டு எமது உயிரோடு எமது அணுக்களோடு இணைந்தவை. அவற்றை லேசாகச் சொல்வது அல்லது எழுதுவது தொடர்பாக எனக்கு உடன்பாடில்லை. எமது கலாசாரப் பின்னணி மற்றும் வாழ்வியல் அமைப்புகள் எமது பெண்களை இன்னும் தைாியசாலிகளாக ஆக்கவில்லை. அதற்கு பெண்கள் இயக்கங்கள் கிராமம் கிராமமாக வேலைசெய்ய வேண்டும். பெண்கள் அமைப்புகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் போதாது.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பெண்ணிலைவாதிகள் தமிழ்ப் பெண்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பொதுவாக பெண்ணிலை வாதிகள் என்றால் ஆண்களுக்குச் சமமாக உாிமை கோருபவர்கள் அத்தோடு சிகரெட் புகைப்பவர்கள் அல்லது மதுசாரம் அருந்துபவர்கள் என்ற மனோநிலை மட்டும் புலம்பெயர் தமிழ் பெண்கள் மத்தியில் இருக்கும் மனோநிலை. அதனை அகற்றி பெண்கள் அமைப்புகள் வேலை செய்ய வேண்டிய பாாிய தேவை இருக்கிறது.

இந்தக் குடும்பப் பிளவுகள் சாதாரண குடும்பங்களிடையே மட்டுமல்ல படித்த அல்லது பிரபல்யமான எழுத்தாளர்கள் சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்கள் மத்தியிலும் எழுவது தான் பிரச்சனையே!

ஏன் அவர்களால் கூட இதனைச் சாி செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரே சிந்தனை ஓட்டமுள்ளவர்களாலும் இந்தச் சிக்கலில் இருந்து மீள முடியாமல் இருக்கிறது. அண்மையில், எனது நண்பர்கள் இருவர் நல்ல அறிவாளிகள், எழுத்தாளர்கள் ஒன்றாக வாழ முடியாமல் பிாிந்து போய்விட்டார்கள். கணவன் மனைவியிடையே கவலைகள், பிரச்சனைகளுக்கான வடிகால்கள் மூடப்படுவது ஏன் ? ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்துக்கு ஒவ்வாமல் இருப்பது இயற்கை. அதனை ஒன்றும் செய்ய முடியாது. இதனை ஏன் கணவன், மனைவி இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறார்கள் ? அவர்களுக்கு மத்தியில் பூிந்துணர்வு ஏற்பட ஏன் வழி அமைவதில்லை. இருவரும் ஒன்றாக இருந்து தனித்து பேசி ஒரு தீர்வு காண்பதற்கு ஏன் முடிவதில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

வெள்ளைக்காரருடைய சுதந்திரத்தன்மை எமது ஆண், பெண்கள் மத்தியல் ஒரு அதீத துணிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால், பிரச்சினைகள் வரும்போது, அவர்களைப் போல் தீர்க்க முடியாமல் போய்விடுகிறது.

கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் பிளவுகளுக்கு முக்கிய காரணம் இரண்டு பேருமே கருத்துகளை அன்பை பகிர்ந்து கொள்ளாமல் முரண்டு பிடிப்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

இருந்து பேசி ஒரு கருத்தொற்றுமைக்கு வருவது என்பதும் விட்டுக்கொடுப்பு என்பதும் இல்லாமல் இருப்பது ஒரு பொிய குறையாகும்.

ஆண்கள் இந்த விடயத்தில் பொிதும் முரண்டு பிடிப்பதை லண்டனில் நான் எத்தனையோ குடும்பங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். குடும்பத்தில் பிரச்சினை வரும்பொழுது கூட இருக்கும் துணையை திருப்பதிப்படுத்தாமல் தங்களோடு தாங்களே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தத்தமது நண்பர்களிடம் போய் மனக்கவலையை முறையிடுகிறார்கள்.

அநேகமாக, புலம்பெயர் நாடுகளில் கணவன்-மனவைி இருவருமே வேலைக்குப் போபவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் அழுத்தும் பொருளாதாரச்சுமை. வேறு வழியில்லை வேலை செய்தே ஆக வேண்டும் வீட்டு வாடகை, தண்ணீர் ரெலிபோன், குடும்பச் செலவு, பிள்ளைகள் செலவு, இலங்கையிலுள்ள உறவுகளைப் பார்ப்பது என்று பாாிய செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பண அழுத்தத்தில்…. அந்தரப்படுவதினால் வேலை அத்தியாவசியம்.

வேலைசெய்யும் இடத்தில் ஆண்கள் நண்பிகளோடு பழகுவதும், பெண்கள் நண்பர்களோடு பழகுவதும் தவிர்க்க முடியாததாகி பின்னர் ஆண் தன் கவலைகள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ள நண்பியையும், பெண் நண்பரையும் நாடும் பொழுது கவலைப் பாிமாற்றம் ஆழமான உறவுகளை ஏற்படுத்தும்.

இது கணவன்-மனவியிடையே சந்தேகத்தை தோற்றுவிக்கும் ஒரு காரணியாக கால கெதியில் மாறிவிடும் ஒன்றாகிவிடுகிறது. அதிலும், வெள்ளைக்கார நண்பர்கள்-நண்பிகளின் ஆலோசனை அவர்களுடைய பார்வை, கண்ணோட்டம், ஆலோசனை அவர்களுடைய நாட்டு கலாசார பின்னணியை பிரதிபலிப்பதாய் இருக்கும் தவிர்க்க முடியாது.

பெண்களுக்கான முன்னூிமைய ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கும்…

பிரான்சில் எனக்குத் தொிந்த ஒரு குடும்பம். கணவன் டொக்டர், மனைவி ஒரு சுப்பர் மார்க்கெட்டில் முகாமையாளர். இருவருக்கும் ஒரே பிரச்சனை நீண்ட நாட்கள் தொடர்ந்தது. மனைவியின் நண்பர் ஒரு பிரரெஞ்சுக்காரர். அவர் அவவின் பிரச்சினைகளைக் கேட்டுவிட்டு ஆலோசனை சொல்லியிருக்கிறார். கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு இரவு பொலிஸை அவசர தொலைபேசி அழைப்பில் கூப்பிட்டார். மறு பேச்சில்லை கணவனின் வாக்கு மூலம் பற்றி கவலைப்படாமல் பொலிஸ் அவரை கொண்டு போய் அடைத்து விட்டது. பின்னர் விவாகரத்தில் போய் முடிந்துவிட்டது. அதற்காக கணவனின் தொல்லைகளை எல்லாம் மனைவியோ அல்லது மனவைியின் தொல்லைகளை எல்லாம் கணவனோ பயந்து பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல எனது வாதம்.

ஒரு கடை வைத்திருக்கும் பணக்காரக் குடும்பத்தை பார்த்திருக்கிறேன் லண்டனில். பெண்ணின் விருப்பமில்லாமல் லண்டன் மாப்பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் முடித்து இப்பொழுது இருபது வருடங்கள். மூத்தவனுக்கு பதினெட்டு வயது. இளையவனுக்கு பதின்னான்கு. இரண்டு பிள்ளைகள். சமூகத்தில் விழாக்களுக்கு ஒன்றாகவே வருவார்கள். பேசமாட்டார்கள். ஒருவருக்கொருவர். பிள்ளை சொல்கிறாள் “இலங்கை மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். அவன் அப்பாவைப் போல் இருப்பான். சண்டை பிடிப்பான், அடிப்பான்|| மகன் சொல்கிறான் “இலங்கையில் திருமணம் முடிக்க மாட்டேன். அவள் அம்மாவைப் போலிருப்பாள்” எப்பொழுதும் ஏசுவது.

மகள் சொல்கிறாள் “நான் வெள்ளைக்காரனைத்தான் கலியாணம் முடிப்பேன். அவள் இங்கு பிறந்து வளர்ந்தவள். எனது மன உணர்வுகளை அவன் பூிவான். நானும், அவனைப் பூிவேன். அதுவும் உடன் திருமணமில்லை ஒரு வருஷம் கூட வாழ்ந்து பார்த்து விட்டுத்தான்”

இந்தப் பிசகு எமது அப்பா-அம்மாவில் இருந்து வந்தது. ஆனாலும், அந்தக் கணவன் மனவைியால் இன்னும் சேர முடியாமல் இருக்கிறது. இருவருக்கும் ஈகோ. லண்டனில் ஒரு எழுத்தாளர்+எஞ்சினியர் அவாின் குடும்பத்தில் நடைபெறும் சண்டையைப் பார்த்து மகன் சொன்னான். “அம்மா நான் வீட்டை விட்டுப் போகப்போகிறேன்” காலை முதல் மாலை வரை கணவனுக்கு பணிவிடை செய்து ஓடாய்த் தேய்ந்து போன அம்மாவை அவன் பார்க்கிறான். ஆனால், அப்பாவின் தொல்லையும் எாிந்து விழுவதும் அவனது மனநிலையைப் பாதிக்கச் செய்துவிட்டது. அம்மாவுக்கு ஒரு வடிகால் அவளது ஒரு நண்பன். அம்மா அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு மகனே தனது கைத்தொலைபேசியில் அம்மாவையும், நண்பரையும் பேசவைப்பான். அந்தக் கணவன் மனைவியிடையே கிட்டத்தட்ட பத்து வருடமாக தாம்பத்திய வாழ்வே கிடையாது. தாம்பத்தியம் தொடர்பான பூிந்துணர்வு, மனப்பாிமாற்றம் எதுவுமற்ற வெறும் சமூக ஜடங்களாகவே அவர்களின் வாழ்வு கரைகிறது.

லண்டனில் உள்ள வாலிபன் ஒருவன் ஒரு அழகான பெண்ணைத் திருமணம் செய்தான். கை நிறைய சீதனம், கார் எல்லாம் பெண் வீட்டில் இருந்து பெற்றான். மூன்று மாதம் கழியவில்லை. தனது மனைவி மீது அவனுக்கு அளவுக்கு மீறிய அக்கறை மனைவியின் அழகு தன்னிடமிருந்து அவளைப் பிாித்து விடுமோ என்ற அச்சம் அவனது மனதில் தோன்றியிருக்கிறது. என்னோடு கதைக்கும் போது அவனின் எண்ண ஓட்டத்தைப் பூிந்து கொண்டேன். அவன் ஒருவகை இனம்பூியாத மன நோயாளியாகவே அவனை நான் பார்த்தேன். அப்படி இருக்காது. அவள் உன்மீது காதலையும் அன்பையும் வைத்திருக்கிறாள் என்று எவ்வளவோ புத்திமதிகளையும் சாியான சிந்தனை பற்றியும் சொன்னேன். மன அடக்கம், யோகாசனம் போன்ற முக்கியங்களையும் விளங்கப்படுத்தினேன்.

அவனின் வக்கிர எண்ணங்கள் இதனைச் சட்டை செய்யவில்லை. அவன் அவளக்கு அடிப்பதில்லை, ஏசுவதில்லை… ஆனால் வேலைக்குச் செல்லும்பொழுது எல்லாக் கதவுகளையும் இறுகத் தாழ்பாளிட்டுவிட்டு தொலைபேசி இணைப்பையும் பூட்டிவிட்டு போவான். அவளுக்கான எல்லாவிதமான சாமான்களையும் வீட்டுக்குள் வைத்து விட்டு தினமும் அறையைப் பூட்டும் கணவனை எண்ணி எண்ணி துவண்டுபோனாள் அந்தப் பெண். வீட்டுக்கு யாரையும் அழைத்துப் போவதில்லை. அவனின் ஒரு நண்பனைத் தவிர. தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளான அவனை அவனின் நண்பனே ஒரு நாள் வீட்டை உடைத்து அழைத்துச் சென்றுவிட்டான். இப்பொழுது அவர்கள் இருவரும் லண்டனின் புறநகர்ப் பகுதி ஒன்றில் சேர்ந்து வாழ்கின்றனர்.

லண்டனில் ஒரு பஸ் ஓட்டுநாின் குடும்பத்தில் கணவனின் சந்தேகம் மனைவி மீது. அவனின் தொல்லை தாங்காமல் தனது பதினொரு வயது மகளோடு பிாிந்து போய் நலன்பூி நிலையமொன்றில் தனித்து வாழுகிறார்.

ஹொலண்டில் ஒரு அரச உத்தியோகத்தாின் மனைவி தனது பிள்ளையோடு அவரை விட்டுப் பிாிந்து வாழுகிறாள்.

இப்படி எண்ணற்ற தமிழ்க் குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாகி வருகின்றன. இது ஒரு பாாிய சமுதாய அழிவாக இருக்கின்றது. புலம் பெயர்தலின் ஒரு சீரழிவு இதுவாகும். யுத்தம் எமது தமிழர்கள் மத்தியில் எமது கூட்;டு வாழ்வு. அந்நியோன்யம் எல்லாவற்றையும் சிதிலமாக்கி விட்டது.

எமது கிராமங்களில் ஏற்படும் கணவன், மனைவி சண்டையை தீர்த்து வைப்பதற்கு பொியவர்கள் வருவார்கள். இங்கே கணவன் மனைவி பற்றிய விட்டுக்கொடுப்புகளும் பூிதலும் உள்ளது போல புலம் பெயர் நாடுகளில் இல்லை. குடும்பங்கள் மீதான அக்கறை யாருக்கும் இல்லை. கூட்டு வாழ்வு அன்புடனான பிரயத்தனங்கள் இல்லை. மனப் பிறழ்வைத் தீர்க்கக்கூடிய மாற்றுகளைத் தேடாமல் தனக்கு தனது எண்ணத்துக்கு மட்டும் சாி என்று படும் எல்லாவ்றையும் செய்யும் அசட்டுத் துணிவு மட்டுமே மேலோங்கி நிற்கிறது. இவர்கள் ஒத்த அலைவாிசையை ஒத்த கருத்துடைய தம்பதிகள் என்று எண்ணிய மறு கணமே குடும்பம் பிளவுபட்டுப் போய் நிற்கிறது.

நல்லவர்கள், கனவான்கள் என்று நாம் எண்ணுபவர்களின் குடும்பங்களுக்குள்ளேயே உட்பூசல்களைத் தீர்க்க முடியாமல் திணறிப் போய்விடுகிறார்கள். கவுன்ஸிலிங் சென்டர்களுக்கு போய் அறிவுரை கேட்டாலும் அதனைப் பின் பற்றாமல் காலை கவுன்ஸிலிங் மாலை சண்டையோடு காலம் கழிக்கிறார்கள். இதற்கான தீர்வு மனதோடு தான் இருக்கிறது. மனமும் மனமும் பேச வேண்டும். அது எமது தமிழ் கணவன் மனைவியிடையே அற்றுப் போகாமல் வளர்ப்பது தான் ஒரேவழி. வேறு தீர்வை நாடமுடியாது. அப்பா அம்மாவின் சண்டை எமது அடுத்த தலைமுறையின் அழிவுக்கே கொண்போய் விடும். எமது தமிழ் குடும்பங்கள் புலம்பெயர் நாட்டில் ஒரு உறுதியில்லாத வாழ்வலங்களைச் சுமந்துள்ள அநாதைகளாக இன்னும் எத்தனை காலங்களுக்கு இருக்கப் போகின்றன என்பது தான் மனதை உலுக்கும் பாாிய வினா ?

இளைய அப்துல்லாஹ்

லண்டன்

—-

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்